நோர்வேயில் முதல் முறையாக மாபெரும் தமிழ் திரைப்பட விழா- 2010

தமிழ் திரையுலகம் ஒவ்வொரு வருடமும் புதிய சாதனைகளை படைத்தது முன்னேறி வருகிறது. ஒரு  வருடத்திற்கு  நூறு  படங்கள்  வெளிவரும்   நிலையிலிறிந்து  முன்னேறி , 2009-இல்131 திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. காளிதாசில் பேசத்தொடங்கிய தமிழ் சினிமாவிற்கு இந்த ஆண்டு அகவை 78.  தமிழர்கள் வாழ்விலும், உலகத்தமிழர்களின்  கலாச்சாரத்தோடும் ஒன்றாக கலந்து விட்ட தமிழ்  சினிமா, உலகத்தின் விழித்திரைகளில் மெல்ல மலரத் தொடங்கி உள்ளது.       தமிழ் தாய் பெற்றெடுத்த இசைத்திருமகன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் உலகத்தின் உயர்ந்த விருதுகளை வாங்கிய வண்ணம் உள்ளார். தமிழ் சினிமா சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்குபற்றத் தொடங்கியுள்ளது. ஈரான் திரைப் படங்களுக்கு நிகராகவும், ஆங்கிலத் திரைப்படங்களின் தரங்களை தாண்டும் அளவிற்கு தொழில்நுட்பம் தமிழ் சினிமாவிலும் நிறைந்துள்ளது.

     இன்று தமிழ் மக்களின் முக்கிய பொழுதுபோக்காக   திரைப்படங்கள்தான்  என்ற  நிலை  உருவாகி  உள்ளது . அதற்கு காரணம்  , தமிழ்  படங்களின்  உயர்ந்து  வரும்  தரம்  மற்றும்  மக்களின்  வாழ்க்கை  நெறி  முறையில்  அவைகள்  ஆற்றும்  முக்கிய  பங்கு . தமிழ் சினிமாவின் வியாபாரத்தை நிர்ணயிக்கும் சக்தியாக உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களும்  இருக்கிறார்கள்.


    
    இப்படியான ஒரு சூழலில் தரமான கதைகளை கொண்ட தமிழ்ப்படங்களை  உலகத் திரையரங்குகளில் திரையிடுவதர்க்கான முன் முயற்ச்சியாகவும், தமிழ்ப்படங்களை வேற்று நாட்டு இனத்தவர்கள் பார்த்து மகிழவும்,  நோர்வேயில் முதல் முறையாக  தமிழ் திரைப்பட விழா அரங்கேறுகிறது. உலகத்தில் எத்தனை திரைப்பட விழாக்கள் நடைபெற்றாலும், தமிழர்களால் நடாத்தப்படும் தனிப் பெரும் விழாவாக இது மாறும் என நம்புகின்றேன்.  இத் திரைப்பட விழாவை நோர்வேயில் ஆரம்பித்து வைப்பதில், நோர்வேயில் வாழ்கின்ற தமிழர்கள் நாம் பெருமை அடைகிறோம்.

    தமிழ் திரைப்பட விழாவில் கலந்துகொண்டு  சிறப்பிக்க, தமிழகத்தில் இருந்து திரைப்பட இயக்குனர்கள் எஸ்.பி.ஜனநாதன், சசிக்குமார், மிஷ்கின் மற்றும் சமுத்திரகனி ஆகியோரோடு கனடாவில் இருந்து "1999" என்னும் திரைப்பட இயக்குனர் எஸ்.லெனின் அவர்களும் நோர்வேக்கு வருகை தருகின்றார்கள்.

    இத்திரைப்பட விழாவை முன் நின்று நாடத்துவதில் வி.என்.மியூசிக் டிரீம்ஸ் நிறுவனம் மகிழ்ச்சியடைகின்றது. தமிழ் திரைப்பட விழா சிறப்பாக நடைபெற என்னோடு இணைந்து எனது நண்பர்கள் பலரும், தமிழகத்தில் இருந்து Moser baer CEO கோ.தனஞ்செயன்  , வி.எஸ்.உதயா  அவர்களும் பெரும் பணி ஆற்றுகின்றனர்.   அவர்கள் வழங்குகின்ற பெரிய ஒத்துழைப்போடு மேலும் இவ்விழா சிறப்புற நோர்வேயில் வாழ்கின்ற அனைத்து தமிழ் மக்களின் நல்வரவை  வேண்டி நிக்கின்றேன்.

    இந்த விழாவின் நிறைவு நாளான அன்று நீங்கள் தெரிவு செய்கின்ற திரைப்படங்கள், நான்கு வகையான  விருதுகளைப் பெறப்போகின்றன என்பது மகிழ்வான செய்தியாகும். திரை அரங்கம் நிறைந்த தமிழ் மக்களை காண நோர்வே நாட்டுக்கு வருகின்ற இயக்குனர்களை, நோர்வே வாழ் தமிழர்கள்  அனைவரும் வரவேற்போம் வாருங்கள்.

    இந்த வருடம் தமிழ் திரைப்பட விழாவிற்கு  தேர்வுசெய்யப்பட்டுள்ள  படங்கள்:

    6 ஆம் திகதி, மாசி மாதம் 2010
  •     10.00 காலை – “மாயாண்டி குடும்பத்தார்”
  •     13.00 பிற்பகல் – “பேராண்மை ”
  •     16.00 மாலை – “அஞ்சாதே”
  •     19.00 மாலை – “ பொக்கிஷம்”
  •     21.40 இரவு – “பூ”
    7 ஆம் திகதி, மாசி மாதம் 2010
  •     11.00 காலை – “மீண்டும்” (நோர்வேயில் எடுக்கப்பட்ட திரைப்படம்)
  •     13.00 பிற்பகல் – “ஈ”
  •     16.00 மாலை – “1999” (கனடாவில் எடுக்கப்பட்ட திரைப்படம்)
    8 ஆம் திகதி, மாசி மாதம் 2010
  •     13.00 பிற்பகல் – “சுப்ரமணியபுரம்”
  •     16.00 மாலை – “யோகி”
  •     19.00 மாலை – “பசங்க”
  •     21.40 இரவு – “நாடோடிகள்”
    9  ஆம் திகதி, மாசி மாதம் 2010
  •     16.00 மாலை – “நந்தலாலா
என  13 திரைப்படங்கள் Filmenshus Kino திரையரங்கில்  திரையிடப் படுகின்றது.
நீங்களும்  திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்கான நுழைவுச்சீட்டுக்கள் விற்பனை ஆகிக்கொண்டு இருக்கிறது.
    உங்களுடைய நுளைவுச்சீட்டினை பெற்றுக்கொள்ள முந்திக்கொள்ளுங்கள். தமிழ் திரைப்பட விழா தொடர்பான மேலதிக தொடர்புகளுக்கு:
    http://www.vnmusicdreams.com/page.html?lang=eng&catid=1

    தொலைபேசி  இலக்கம் : 0047 913 70 728

    தமிழ் திரைப்பட விழா
    இணைப்பாளர்
    வி.என்.மியூசிக் டிரீம்ஸ்
    வசீகரன் சிவலிங்கம்
    Vaseeharan.S
    ஒஸ்லோ, நோர்வே.

Comments

Most Recent