ரம்பாவுக்கு 8-ம் தேதி திருமணம்... நடிப்புக்கும் அன்றே முழுக்கு!

 http://thatstamil.oneindia.in/img/2010/01/31-ramba200.jpg

இந்திரன் என்ற தமிழ் தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ள ரம்பாவுக்கு வரும் ஏப்ரல் 8-ம் தேதி திருப்பதியில் திருமணம் நடக்கிறது. திருமணத்துக்குப் பிறகு நடிக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார் ரம்பா.

தனது மேஜிக் வுட்ஸ் நிறுவனத்துக்கு ரம்பாவை விளம்பர தூதராக நியமித்த இந்திரன், அடுத்த சில தினங்களில் அவருடன் காதல் வயப்பட்டார்.

ரம்பாவுக்கு காதல் பரிசாக ஏற்கனவே ரூ ஒன்றரை கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ கார் கொடுத்த எந்திரன், நிச்சயதார்த்தத்துக்கு ரூ 1 கோடிக்கும் அதிக மதிப்பு கொண்ட வைர மோதிரத்தை அணிவித்தார்.

இவர்களின் திருமண தேதி இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் மார்ச் 27-ம் தேதி திருமணம் என்றார்கள். இப்போது சற்றுத் தள்ளி ஏப்ரல் 8-ந்தேதி திருப்பதியில் நெருங்கிய உறவினர்கள் புடை சூழ திருமணம் நடப்பதாக அறிவித்துள்ளனர்.

திருமணத்துக்கு பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு கணவருடன் கனடாவில் தங்க ரம்பா திட்டமிட்டுள்ளாராம்.

Comments

Most Recent