நயன்தாரா பிடிச்சதால, நைன்(9) நம்பரில் காரா?

கட்டிய மனைவி குத்துக்கல்லாய் இருக்க, நயன்தாரவுடன் தொடர்பு ஆழமானதில் பெயரும்,  புகழும் நாறிப் போனாலும் பிரபுதேவா பின்வாங்குகிறமாதிரி இல்லை. அவர் ஜாதகத்தை கண்மூடித்தனமாக நம்பும் பிற்போக்குவியாதி என்கிறார்கள்,  அவருக்கு நெருக்கமானவர்கள். அடுத்தடுத்து போக்கிரி, வாண்டெட் படங்கள் வெற்றிபெற்றதற்கு நயன் நட்பே காரணம் என்று எவனோ ஒரு உட்டாலக்கடி சோதிடன் சொல்லப்போக,  பிரபுதேவா தற்போது வாங்கியிருக்கும் காஸ்ட்லி காரின் எண் கூட ‘ 9 ’. தலைப்புக்கான மேட்டர் இந்தளவில ஒவர். ஆனா படத்துக்கான மேட்டர் அறிய தொடர்ந்து படிங்க..
இப்படியோரு சூழ்நிலையில்தான்,  அபிஷேக் பச்சனை இயக்க வாய்ப்பு,  ஜெயம்ரவியை இயக்க வாய்ப்பு,  என்று அடுத்தடுத்து வந்த வாய்ப்புகளில் ஜெயம்ரவியை இயக்கும் ‘இச்’ படத்துக்கு  நேரே கமலிடம் சென்று ஸ்ருதியை ஹீரோயினாகத் தாருங்கள் என்று கேட்க,  கமல் ஒகே சொல்ல அன்றே 25லட்சம் சம்பளம் பேசப்பட்டு,  5 லட்சம் கொடுத்திருகிறார்கள் தயாரிப்பாளர் தரப்பில்.
ஆனால் தடாலடியாக இப்போது அட்வாண்ஸை திரும்பக் கொடுத்திருகிறார் ஸ்ருதி. ஸ்ருதி பின்வாங்கியதன் பின்னனியில் அவர் தெலுங்கு படத்துக்கு தந்த தேதிகளோடு,  அப்பா அடுத்து கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கும் படத்துக்கு இசையமைக்கும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டிருகிறார் என்பதுதான் காரணமாம். ஸ்ருதி விலகியதாக தெரிந்த அன்றே தடாலடியாக உள்ளே புகுந்து அந்த வாய்ப்பை கைப்பற்றியிருகிறார் ஹன்சிகா மொத்வாணி!
யார் இந்த ஹண்சிகா?

ஹூண்டாய் சான்ட்ரோ கார் விளம்பரத்தில் தோன்றிய  ஹன்சிகா, பாலிவுட்டிலிருந்து டோலிவுட்டிற்கு இடம் பெயர்ந்தவர் நாயகி. பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக 50க்கும் அதிகமான படங்களில் நடித்த இவர், பதினான்கு வயதிலேயே ஹீரோயின் ஆனவர். ஹிமேஷ் ரேஷ்மயாவின் ‘ஆப் கா சுரூர்’ படத்தில் அவருடன் ஜோடி போட்டு நடித்தார். கோவிந்தாவுடன் மனி ஹே தோ மனி ஹை என்ற படத்தில் தலை காட்டினார்.  வளர்ந்து ஆளான பிறகு பத்து படங்களில் நடித்துவிட்டாலும் பாலிவுட் அவ்வளவாக ருசிக்காத நிலையில்  தெலுங்கு தேசத்துக்கு கலைச்சேவை...மன்னிக்க! கவர்ச்சி சேவை செய்ய வருகை தந்தார்.

அங்கே,  தேசமுத்ரு,  காந்த்ரி,  மஸ்கா, பில்லா ஆகிய படங்களில் நடித்த ஹன்சிகாவின் தாராளம் பார்த்து கன்னடம் கைநிறைய அள்ளிக்கொடுக்க டோலிவுட்டிலிருந்து டைவடித்து புனீத் ராஜ்குமாருடன் பிந்தாஸ் என்ற படத்தில் நடித்தார். கோலிவுட்டில் மாப்பிள்ளை படத்துக்காக பெண் தேடிக்கொண்டிருந்த இயக்குனர் சுராஜ் இப்படியோரு தாரளப் பெண்ணா! என்று வாய் பிளந்து  தனுஷூக்கு ஜோடியாக அறிமுகப்படுத்துகிறார்.
இங்கே வந்த வேகத்திலேயே கோலிவுட்டின் அட்ஜஸ்ட்மெண்டுகளை புரிந்து கொண்ட ஹண்சிகாவுக்கு ஸ்ருதியிடமிருந்து அட்வாண்ஸ் திரும்பிவந்த விஷயத்தை பிரபல பி.ஆர்.ஓ சொல்லி,  பிரபுதேவாவைப் பிடியுங்கள் என்று வழிகாட்ட சோழிங்க நல்லூரில் தயாரிப்பாளருக்கு சொந்தமான கெஸ்ட் அவுஸில் தனது ‘இச்’ ஸ்கிரிப்ப்டின் ஃபைனல் டச்சில் இருந்த பிரபுதேவாவை சந்தித்து வாய்ப்பை லபக்கியிருகிறார்.
“என்னைப் போன்ற ஹீரோயின்கள் கவர்ச்சியாக நடிப்பதைத்தான் ரசிகர்கள் விரும்புகிறார்கள். அதனால் கவர்ச்சியாக நடிப்பதில் எந்த தவறும் இல்லை தென்னிந்திய சினிமாவில் பிசியாக இருப்பதால் சில இந்தி வாய்ப்புகளை கூட மறுத்திருக்கிறேன். தெலுங்கில் கவர்ச்சி உடைகளில் நடிப்பது பற்றி கேட்கிறார்கள். கவர்ச்சியாக தெரியவே எல்லா நடிகைகளும் விரும்புகிறார்கள். ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்கள். நான் வெளிப்படையாகப் பேசுகிறேன் " என்று சொல்லி கோலிவுட்டில் நுழைந்ததுமே மீடியாவுக்கு தீனி போட்டிருகிறார். இன்னும் போடுவார் எதிர்பார்க்கலாம்!
இந்நேரம் கோலிவுட் நடிகைகளில் யாருக்கெல்லம் கிலி பிடித்த்தோ!

Comments

Most Recent