யோகி தோல்வியடைந்த பிறகு பொது நிகழ்ச்சி எதிலும் தலைகாட்டவில்லை அமீர். கண்ணபிரான் ஸ்க ி ரிப்ட் வேலைகளில் அவர் முழ...
யோகி தோல்வியடைந்த பிறகு பொது நிகழ்ச்சி எதிலும் தலைகாட்டவில்லை அமீர். கண்ணபிரான் ஸ்கிரிப்ட் வேலைகளில் அவர் முழுவீச்சில் இறங்கியிருப்பதாகவும், கண்ணபிரானை வெற்றிப் படமாக்கிய பிறகே பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுப்பார் எனவும் கூறப்பட்டது. ஆனால் கிராஸ் டாக்கில் வரும் செய்திகள் வேறு மாதிரி உள்ளன.
பாலுமகேந்திராவின் சிஷ்யரும், கூடல் நகர் படத்தின் இயக்குனருமான சீனு ராமசாமி அமீரை கதாநாயகனாக்கி ஒரு படம் இயக்கயிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் கதை பிடித்திருந்ததால் இந்தப் படத்தில் அமீர் நடிக்க ஒத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. அமீருக்கு ஜோடியாக நடிப்பவர் ஆண்ட்ரியா.
சீனு ராமசாமி உள்பட யாரும் அதிகாரபூர்வமாக இதனை ஒத்துக் கொள்ளவில்லை. இது பூதமா இல்லை புகையா என்பது இரண்டொரு நாளில் தெரிந்துவிடும்.

Comments
Post a Comment