AR Rahman out from Vikram's film

விக்ரம் படத்திலிருந்து விலகிய ஏ.ஆர்.ரஹ்மான்

 http://api.ning.com/files/2xUEAnQJDIApWH1rDEomfgeeZRxDk51mRqR7I6UAJN4_/rahman2004.jpg
மோகன் நடராஜன் தயா‌ரிக்கும் படத்துக்கு கால்ஷீட் கொடுத்திருந்தார் விக்ரம். படத்தை இயக்குகிறவர் விக்ரம் கே.குமார். ஒளிப்பதிவு பி.சி.ஸ்ரீராம், இசை ஏ.ஆர்.ரஹ்மான். படத்துக்கு 24 என்று பெயரும் வைத்தனர்.

இந்நிலையில் கதையில் விக்ரம் சொன்ன திருத்தங்களை விக்ரம் கே.குமார் ஏற்கவில்லை. இதனைத் தொடர்ந்து அவர் படத்திலிருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதில் பூபதி பாண்டியன் விக்ரமை இயக்குவார் என தயா‌ரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

இயக்குனரை மாற்றியது ரஹ்மான், பி.சி.ஸ்ரீராம் இருவருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. பூபதி பாண்டியனின் முந்தையப் படங்களை பார்த்திருக்க வேண்டும். இந்த புராஜெக்டில் பணிபு‌ரிய முடியாது என்று இருவரும் பை சொல்லியிருக்கிறார்கள்.

தற்போது ரஹ்மானுக்குப் பதில் மணிசர்மாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

Comments

Most Recent