Asin said ok for Shimbu's next project

 http://thatstamil.oneindia.in/img/2010/02/17-asin200.jpg
இந்திப் படங்களில் நடிக்கப் போனதும், உயரத்தில் நின்றபடி தமிழ்ப் படத் தயாரிப்பாளர்களை நக்கலாகப் பார்த்த அசின், இப்போது அப்படியே தொபுகடீர் என்று தரைக்கு வந்துவிட்டார்.

இரண்டாவது படம் ஊத்திக் கொண்டதுமே, இந்திக்காரர்கள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட, இப்போது மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார் அம்மணி.

தனது மறுபிரவேசத்தில் முதல் படமாக விஜய் நடிக்கும் 51 வது படத்துக்கு தொடர்ச்சியாக கால்ஷீட் கொடுத்துள்ளார். இந்தப் படத்தை இயக்குபவர் மலையாள இயக்குநர் சித்திக்.

அடுத்து சூர்யாவை வைத்து முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கவும் அசின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அசினை இந்திக்குக் கொண்டுபோனவர் முருகதாஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்புவும் அசினை சந்தித்து தனது 'வாலிபன்' படத்தில் நடிக்க அழைத்துள்ளாராம். கதையைக் கேட்ட அசின் இப்போதைக்கு கண்டிப்பாக நாம சேர்ந்து ஒரு படம் பண்ணனும். வாலிபன் கதை நன்றாக உள்ளது என்று கூறியுள்ளாராம். அசினே எதிர்பார்க்காத பெரும் தொகையைத் தரவும் சிம்பு முன்வந்துள்ளதுதான் அசினின் இந்த பதிலுக்குக் காரணம்.

இப்போதைக்கு அசின் கைவசம் 4 தமிழ்ப் படங்களும் ஒரு தெலுங்குப் படமும் உள்ளதாம். சென்னை சேத்பட்டிலுள்ள தனது ஃப்ளாட்டையும் புதுப்பிக்கச் சொல்லிவிட்டாராம்!

Comments

Most Recent