வார இறுதியில் அசலாக வரும் தல

அல்ட்டிமேட் ஸ்டார் அஜித்தின் 'அசல்' இந்த வார இறுதியில் திரைக்கு வருகிறதாம். அதற்கான ரிசர்வ் டிக்கெட்டுகள் ஜனவரி 29 முதல், விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
தல ரசிகர்கள், அரம் புறமாக டிக்கெட்டுக்களை வாங்கி செல்கின்றார்களாம். சென்னை காசி திரையரங்கில் முதல் காட்சியாக, 5.30 மாலை காட்சி காண்பிக்கப்படுகிறதாம். இது வரை கிடைத்துள்ள தகவல்கள் படி, ஹவுஸ்புல்லாக படம் ஒரு மாதத்திற்கு அதிகமாக ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சரண் இயக்கத்தில் அஜித், பாவனா, சமீரா ரெட்டி ஆகியோர், நடித்துள்ளனர். பில்லா படத்தின் சாயல், ட்ரெயிலரிலேயே தெரிகிறது.
படமும் முழுக்க, தாய்லாந்து, மற்றும் கிழக்காசிய நாடுகளிலேயே படமாக்கப்பட்டிருப்பதால், மாறுபட்ட படமாகவே இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

திரையரங்கு சென்று முதல் காட்சியினை பார்த்து விட்டு, வீட்டுக்கு வந்தவுடன் விமர்சனம் எழுதும் வலைப்பதிவர்களின் அதிகரித்த எண்ணிக்கையினால், திரையரங்குகளில் இப்போதெல்லாம் கூட்டம் மொய்க்கிறதாம் என கோடம்பாக்கத்தில் ஒரு பேச்சு.

source :  வார இறுதியில் அசலாக வரும் தல

Comments

Most Recent