எந்திரனுடன் போட்டியிடும் பெண் சிங்கம் ?


படங்கள் தயாரிக்கப்படும் போதே, அவற்றின் தகவல்களை கட்டம் கட்டமாக செய்திகளாக வெளியிட்டு, ரசிகர்கள் மத்தியில் பலத்த ஆர்வத்தினையும் ஆதரவினையும் ஏற்படுத்துவது ஒரு சினிமா விளம்பர உத்தி. இயக்குனர்கள் மணிரத்னம், ஷங்கர் போன்றவர்கள் தங்கள் சினிமா குறித்த செய்திகளை இரகசியமாக வைப்பதனாலேயே பரபரப்பு ஏற்படுத்தியவர்கள்.
அவர்கள் அப்படி இரகசியங் காக்கும் போது, ஏகத்துக்கும் மீடியாக்கள் ஊகங்களைச் செய்தியாகத் தருவதனால் பரபரப்பு ஏற்பட்டு விடுகிறது என்றும்,  இலலை இரகசியம் காப்பதாக் கூறிக்கொண்டே அவர்கள் தான் ஊகக் செய்திகளுககான தகவல்களைக் கசிய விடுகின்றார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
செய்திகள் என்பதையும் தாண்டி, கதையமைப்பு, காட்சிபபடங்கள், பாடல்காட்சிகள், என காலத்துக்குக் காலம் இவர்கள் கையாண்ட இந்த விளம்பர உத்தியின்  உச்சக்கட்டப்பாதிப்பாக 'ஜக்குபாய்' படம் போஸ்ட் புரடக்சனின் போது, இணையத்தில் வெளியாகியது என்றும் சொல்கின்றார்கள். இது இவ்வாறிருக்க; இத்தகைய போக்குகளின் தீவிரம் உணர்ந்த ஷங்கர், தானே சொந்தமாக வலைத்தளம் அமைத்து, அதிலே ' எந்திரன் ' பட ஸ்டில்ஸ்களை வெளியிட்டிருக்கின்றார்.மற்றும்படி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படத்திற்கு மீடியா ஏற்படுத்தும் பரபரப்புக்கக் குறைவில்லை.
இந்நிலையில் அன்மைக்காலமாக எந்திரனுக்குச் சவால்விடும் வகையில்,  ஒருபடம் மீடியா பரபரப்பை உருவாக்கி வருகிறது. அது மட்டுமல்லாது அப்படத்திற்கான பரபரப்பை உருவாக்குவதில் தயாரிப்பாளர்களுடன் இனைந்துகொண்டு விளம்பரம் தருபவர் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் என்பது குறிப்பிடதக்கது. கலைஞர் அவர்களின் கதை வசனத்தில் உருவாகும் 'பெண்சிங்கம்' படத்துக்கே இவ்வாறு முதல்வர் விளம்பரம் தருகின்றார்கள்.
இது அவர் விரும்பிச் செய்கின்றாரே இல்லையோ, இது விடயத்தில் முதல்வர் தொடர்புபடுவதால், 'பெண்சிங்கம்' படத்துக்கு நல்ல மீடியா விளம்பரம் கிடைத்து வருகிறது. இதனை அவதானித்த தயாரிப்பாளரும், சந்தர்பத்தை சரியாகப் பயன்படுத்த, எந்திரனுக்குப் போட்டியாக வாரத்துக்கொரு படச்செய்தி 'பெண்சிங்கம்' படத்துக்கும் கிடைத்துவிடுகிறது.  
நடிகரும், நடன இயக்குனருமான லாரன்ஸ் ராவேந்திரா, இப்படத்தில் தான் ஆடவேண்டிய ஒரு நடனத்துக்கான பாடல் சிடியை, முதல்வரிடம் இருந்து பெறுவதாக ஒரு செய்தியும் படமும் ஊடகங்களுக்கு வந்திருக்கிறது. இதற்கு முன்னரும் 'பெண்சிங்கம்' படம் குறித்த சில செய்திகள், முதல்வர் படப்பிடிப்பைப் பார்வையிட்டார், வசனம் சொல்லிக் கொடுத்தார், என்கின்ற றேஞ்சுக்கு வந்திருக்கின்றன.
தமிழக முதல்வர் என்கிற காரணத்துக்காக அவர் சினிமாவிற்கு கதை வசனம் எழுதுவதோ அல்லது வேறுவகைகளில் தொடர்புபடுவதோ தவறென்று யாரும் சொல்வதற்கில்லை. ஆனால், அவர் தொடர்புடும் விடயத்தை தமிழக அரசின் ஊடகத்துறை, செய்தியாக ஊடகங்களுக்கு வழங்குவது சரியானதா? சரியென்றால்  இந்த சூப்பர் விளம்பர டெக்னிக்கைப் பயன்படுத்த புதுப்படத் தயாரிப்பாளர்கள் முதல்வருடன் ஒப்பந்தம் செய்யலாம் என்பது ஒரு யோசனை..

source : எந்திரனுடன் போட்டியிடும் பெண் சிங்கம் ?

Comments

Most Recent