இந்த ஆண்டு எனக்கு நல்ல தொடக்கம் கிடைத்துள்ளது. நான் சந்தோஷமா இருக்கேன். என் சந்தோஷத்தை கொடுக்காதீங்க என்று நயன்தாரா கூறியுள்ளார். ஐயா பட...
இந்த ஆண்டு எனக்கு நல்ல தொடக்கம் கிடைத்துள்ளது. நான் சந்தோஷமா இருக்கேன். என் சந்தோஷத்தை கொடுக்காதீங்க என்று நயன்தாரா கூறியுள்ளார். ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நயன்தாரா. முதல் படத்தில் பாவாடை தாவணியில் அழகு பதுமையாக ஜொலித்த நயன்தாரா… அடுத்தடுத்த படங்களில் கிளாமரை கூட்டினார். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதைப்போல அம்மணியின் அழகும் மெல்ல மல்ல மறையத் தொடங்கியது. இதனை நேரடியாகவே பலரும் நயனிடம் தெரிவித்ததால் சமீப காலமாக அவர் ஆயுர்வேத சிகிச்சையில் இறங்கியிருக்கிறார் என்பது தனி சங்கதி.
சிம்புவுடன் வல்லவன் படத்தில் நடித்தபோது ஏற்பட்ட நெருக்கம் காதலாகி கசிந்துருகிய நயன்தாரா, அதன் பின்னர் சிம்புவிடம் இருந்து விலகினார். விடாமல் துரத்திய சிம்புவுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு தமிழ் சினிமாவில் சிலகாலம் தலைகாட்டப் போவதில்லை என்ற அதிரடி அறிவிப்புடன் ஐதராபாத் போனார். அந்த நேரத்தில் சிம்பு பிரிவால் வாடிய நயனுக்கு ஆறுதலாக சேர்ந்தவர் நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா. காலப்போக்கில் பிரபுதேவாவுடனான நட்பு காதலாக மாறியது. இருவரும் நட்சத்திர ஓட்டல்களில் அறை எடுத்து தங்கும் அளவுக்கு நெருக்கமானார்கள். கல்யாணம் செய்து கொண்டதாகவும் செய்திகள் கசிந்தன. இதுபற்றி நயனிடமோ, பிரபுவிடமோ கேட்டால்… பதில் சொல்ல மறுத்து வந்தனர். இந்த காதலுக்கு பிரபுதேவாவின் மனைவி ரமலத் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிப்படையாகவே பேட்டி கொடுத்தார்.
இந்நிலையில் சமீபத்தில் முதல்வர் கருணாநிதிக்கு திரையுலகம் சார்பில் நடந்த பாராட்டு விழாவில் பிரபுதேவாவுடன் ஜோடி போட்டு ஆட்டம் போட்டார் நயன்தாரா. இதுபற்றி பேட்டியளித்த பிரபுதேவாவின் மனைவி ரமலத், நயன்தாராவை உதைக்கப் போவதாக பகிரங்கமாகவே அறிவித்தார். இதுகுறித்து நயன்தாராவிடம் நிருபர்கள் பலரும் கேட்டு வருகிறார்கள். அதற்கு அவர் அளித்த பதில் ரமலத்தை எச்சரிக்கும் விதமாகவும் இருந்தது. நயன்தாரா கூறுகையில், கடந்த ஆண்டு எனக்கு சோதனையான ஆண்டு. இந்த ஆண்டு எனக்கு நல்ல தொடக்கம். நான் நடித்த படங்கள் நன்றாக போகின்றன. பிரபுவுடன் சேர்ந்து நடனமாடியது, அதுவும் தமிழ் திரையுலகின் முக்கியமான விழாவில் நடனமாடியது மறக்க முடியாத அனுபவம். இப்போது நான் சந்தோஷமாக இருக்கிறேன். என் சந்தோஷத்தை கெடுக்காதீர்கள்… ப்ளீஸ்ல என்றார். அதோடு தன் மீது யாரும் அவ்வளவு எளிதாக கை வைத்து விட முடியாது என்றும் நயன்தாரா கூறியிருக்கிறார்.
Comments
Post a Comment