எல்லாப் புகழும் இறைவனுக்கே!-கிராமி விருதுகளை வென்ற பிறகு ஏ ஆர் ரஹ்மான் உச்சரித்தவைதான்.

http://thatstamil.oneindia.in/img/2010/02/01-ar200.jpg

எல்லாப் புகழும் இறைவனுக்கே!-ரஹ்மான்


மேலே நீங்கள் படித்த தலைப்பு கிராமி விருதுகளை வென்ற பிறகு ஏ ஆர் ரஹ்மான் உச்சரித்தவைதான்.

கூடவே இந்த விருது பெற தனக்கு ஊக்கமும் உற்சாகமும் தந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் ரஹ்மான்.

கிராமி விருது குறித்த ஏஆர் ரஹ்மானின் செய்தி இது:

"கடவுளே.. என்னால் நம்பவே முடியவில்லை, இத்தனை விருதுகளையும் நான் வென்று விட்டேன் என்பதை. மீண்டும் எல்லாம் வல்ல கடவுளுக்கும், என் ஆன்மீக சுஃபி குரு அமீன் பீருல்லா மாலிக் சாஹிப்புக்கும் நன்றி கூற விரும்புகிறேன்.

ஸ்லம்டாக் மில்லியனேர் படத்தை உருவாக்கிய டேனி பாய்ல், ஃபாக்ஸ் நிறுவனம், ஸ்லம்டாக் மில்லியனேர் படக்குழு, அதில் நடித்த அற்புதமான நடிகர்கள், எம்ஐஏ (மாயா மாதங்கி), ரசூல் பூக்குட்டி,

எனது இசைக்குழுவில் அடங்கிய குல்சார் ஜி, சுக்விந்தர் சிங், தன்வி ஷா, விஜய் பிரகாஷ், எனது நண்பர் சவுண்ட் என்ஜினியர் அமரர் எச் ஸ்ரீதர், தீபக், பிஏ சேதன், விவியன் சைக்ஸ், ஆதித்ய மோடி, சிவகுமார், நோயல் ஜேம்ஸ், கணேஷ், ஃபெய்ஸ், ஆனி மேரி, ரஞ்சித் பரோட்,

நிர்வாணா இசைக் கலைஞர்கள், எனது முகவர்கள் சாம் ஷ்வார்ட்ஸ், அமேஸ் நியூமேன், நண்பர்கள் கரண், கோபால், விஜய், தீபக் கட்டானி, மோகன் சோப்ரா, க்றிஸ், சைமன் லாங்,

எனது குருக்கள் மணிரத்னம், சேகர் கபூர், சுபாஷ் கய், ஆண்ட்ரூ லாயிட் வெப்பர், அல்லிசன், கர்ட்னி, எனது இசைக்குழு,

அப்பா, அம்மா, சகோதரிகள், எனது அருமை மனைவி, குழந்தைகள் மற்றும் உலகம் முழுக்க உள்ள எனது நலம் விரும்பிகளுக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்... ஜெய்ஹோ இந்தியா" என்று கூறியுள்ளார் ரஹ்மான்.

Comments

Most Recent