பாயும் புலி – சீமான் அறிவிப்பு

வருகிற மே மாதம் 18 ஆம் தேதி நாம் தமிழர் இயக்கம் சார்பில் மதுரையில் தமிழ் எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. நாம் முன்பே குறிப்பிட்டது போல் இந்த மாநாட்டில் நாம் தமிழர் இயக்கத்தை அரசியல் கட்சியாக அறிவிக்கிறார் சீமான். இதனை சேலம் வந்த சீமான் நிருபர்களிடம் தெ‌ரிவித்தார்.

நாம் தமிழர் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றப் போவது சீமான் பல மாதங்கள் முன்பே எடுத்த முடிவு. அதற்காக புலிக் கொடி ஒன்றையும் வடிவமைத்துள்ளார். பிரபல இளம் கலை இயக்குனர் இந்த கொடியில் இடம்பெறும் புலியை வரைந்து கொடுத்துள்ளார். சிவப்பு பின்னணியில் பாயும் புலி. இதுதான் நாம் தமிழர் கட்சியின் கொடி.

நடுவில் கருவளையமும் சூ‌ரிய கதிர்களும் உண்டு. மே மாதம் நடக்கும் தமிழ் எழுச்சி மாநாட்டில் இந்த கொடியை அறிமுகப்படுத்துகிறார் சீமான். உலகம் முழுக்க பரவியிருக்கும் தமிழர்களை அடையாளப்படுத்துவதும், அவர்களை ஒருங்கிணைப்பதும், உ‌ரிமைக்காக போராடுவதும் நாம் தமிழர் கட்சியின் நோக்கமாக இருக்கும் என அவர் மேலும் தெ‌ரிவித்தார்.

Comments

Most Recent