சிம்பு பிறந்தநாள் கொண்டாட்டம்

சிலம்பரசனுக்கு இன்று 26வது பிறந்தநாள். எல்லா நடிகர்களையும் போல தனது ரசிகர்களுடன் பிறந்தநாளை அவர் கொண்டாடினார்.

சென்னை ஹபிபுல்லா சாலையிலுள்ள திருமண மண்டபம் ஒன்றில் சிம்புவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு ரசிகர்கள் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

காலை 11 மணியளவில் சிம்பிளான காஸ்ட்யூமில் ஆஜரானார் சிம்பு. கோஷங்கள், வாழ்த்துகள், கேக் வெட்டுதல் என பிறந்தநாள் களைகட்டியது. அதன் பிறகு பத்தி‌ரி‌‌க்கையாளர்களுக்கு பேட்டியளித்தார்.

நயன்தாரா பிறந்தநாள் வாழ்த்து தெ‌ரிவித்தாரா என்றொரு கேள்வி. அந்த சமாச்சாரமெல்லாம் உங்களுக்கெதுக்கு என்று அடுத்த கேள்விக்கு தாவினார்.

அடுத்தடுத்தும் வில்லங்கமான கேள்விகள். தமிழ்ப் படத்தில் உங்களை கிண்டல் செய்திருக்கிறார்களே என்றதற்கு அது ஜஸ்ட் ஒரு படம் என்றார் பெருந்தன்மையுடன். பாலிடிக்ஸ் பற்றிய கேள்விக்கும் அப்படியே. மக்களுக்கு நல்லது செய்ய அரசியல் கட்சியெல்லாம் தேவையில்லை என்பது சிம்புவின் பதில்.

தமிழர்களுக்கு இதைவிட சிறந்த பிறந்தநாள் செய்தி இருக்க முடியாது. வாழ்த்துகள் யங் சூப்பர் ஸ்டார்.

Comments

Most Recent