முதல்வருக்கு பாராட்டு விழா: அஜீத் -விஜய் நடனம்!

இன்று முதல்வர் கருணாநிதிக்கு பாராட்டு மற்றும் நன்றி அறிவிப்பு விழா நடத்துகிறது தமிழ் திரையுலகம். இதில் சிறப்பு நிகழ்வாக முதல்வரைப் போற்றி பின்னணி பாடகர்களுடன் இணைந்து ரஜினி - கமல் பாடுகிறார்கள் என்று கூறப்பட்டிருந்தது.

இப்போது இன்னும் ஒரு சிறப்பு நிகழ்ச்சியாக அஜித்தும், விஜய்யும் இணைந்து ஆடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுடன் சேர்ந்து விக்ரமும் ஆடப் போகிறாராம். இதனால் ரசிகர்களும் கோடம்பாக்கமும் பரபரப்பாக காணப்படுகிறது.

பொதுவாக எந்த விழாவிலும் தலை காட்ட மாட்டார் அஜீத். அப்படியே வந்தாலும் சத்தமின்றி கிளம்பிவிடுவார். அவரே இப்போது விஜய்யுடன் ஆடப்போகிறார் என்பது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியைத் தந்துள்ளதாம்.

இதற்குக் காரணம் ஃபெப்சி தொழிலாளர்களுக்கு முதல்வர் நிலம் கொடுத்திருப்பதுதான் என்பதைத் தவிர வேறென்ன?

மேலும் இந்த விழாவில் நடக்கவிருக்கும் நிகழ்வுகள் குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் சரத்குமார், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் வி.சி.குகநாதன் ஆகிய மூன்று பேரும் விடுத்துள்ள கூட்டறிக்கை:

தமிழ் திரையுலகுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கிய முதல்வர் கருணாநிதி, ஒட்டு மொத்த தமிழ் திரையுலகுக்கும் பையனூர் அருகே குடியிருக்க இடம் வழங்கியிருக்கிறார். இதற்காக, ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் திரண்டு நன்றி பாராட்டும் விழாவினை சிறப்பாக செய்திட முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

பாராட்டு விழாவில் நடைபெற இருக்கும் கலை நிகழ்ச்சிகளுக்கு, நடிகர் அமிதாப்பச்சன் தலைமை தாங்குகிறார். முதல்வர் கருணாநிதி எழுதிய சாக்ரடீஸ் நாடகத்தில், கமல்ஹாசன் நடிக்கிறார்.

கருணாநிதி எழுதிய திரைப்பட பாடல்கள் சிலவற்றை சபேஷ்-முரளி, எஸ்.ஏ.ராஜ்குமார் ரீமிக்ஸ் செய்துள்ளனர். பா.விஜய் எழுதிய ஓரங்க நாடகத்தில் சத்யராஜ், வாகை சந்திரசேகர், கோவை தம்பி, பா.விஜய் ஆகியோர் பங்கேற்கின்றனர். நடிகர் அலெக்சின் மேஜிக் ஷோவும் நடக்கிறது.

கங்கை அமரன் எழுதிய பாடலை யுவன்சங்கராஜா, கார்த்திக்ராஜா, பவதாரணி, வெங்கட்பிரபு ஆகியோர் மேடையில் பாடுகிறார்கள். எஸ்.வி.சேகர், வடிவேல், விவேக், கஞ்சா கருப்பு, சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர், ஆர்த்தி ஆகியோர் பங்குபெறும் நகைச்சுவை நாடகங்களும் இடம்பெறுகிறது.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர், துணைத் தலைவர் விஜயகுமார், சத்யராஜ், விக்ரம், விஜய், அஜீத், சூர்யா, ஜெயம்ரவி, பிரபுதேவா, பிரகாஷ்ராஜ், சிம்பு, தனுஷ், ஆர்யா, ஸ்ரீகாந்த், கார்த்தி, பரத், அருண் விஜய், கிருஷ்ணா, லாரன்ஸ், பிரசாந்த், ஜீவா, ரமேஷ், ஹரிகுமார், சிபிராஜ், அஸ்வின் சேகர், ஆதி, ஷாம், பிரசன்னா, நயன்தாரா, திரிஷா, சினேகா, பிரியாமணி, ஸ்ரேயா, தமன்னா, பூனம்பாஜ்வா, ரம்பா, ருக்மணி, சந்தியா, தேஜாஸ்ரீ, மோனிகா, ரீமாசென், ஷம்மு, விஜயலட்சுமி, கீர்த்திசாவ்லா, சுனைனா, பூர்ணா, மீனாட்சி மற்றும் அனைத்து நடிகர்-நடிகைகள் பங்குபெறுகிறார்கள்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் ராம.நாராயணன், சிவசக்தி பாண்டியன், கே.முரளிதரன், அன்பாலயா கே.பிரபாகரன், எஸ்.ஏ.சந்திரசேகரன், எம்.காஜாமைதீன், தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர், கே.ஆர்.செல்வராஜ், சம்மேளனத்தை சேர்ந்த நிர்வாகிகள் வி.சி.குகநாதன், ஜி.சிவா, அ.சண்முகம், வினியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் கலைப்புலி ஜி.சேகரன், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அபிராமி ராமநாதன், பன்னீர்செல்வம், சின்னத்திரை சார்பில் குஷ்பு, விடுதலை, தென்னிந்திய பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் சார்பில் டைமண்ட் பாபு, சிங்காரவேலு, ரியாஸ், பெரு.துளசி பழனிவேல், மவுனம் ரவி ஆகியோர் விழா ஏற்பாடுகளுக்கு தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள்.

நடன இயக்குனர்கள் டி.கே.எஸ்.பாபு, சிவசங்கர், பிரபுதேவா, கலா, ஸ்ரீதர், தினேஷ், அசோக், ராபர்ட், ஷோபி, லாரன்ஸ் ஆகியோர் பயிற்சி அளித்து வருகிறார்கள்.

வாலி எழுதி, ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள பாடலில் அனைத்து நடிகர்-நடிகைகளும் பங்குபெறுகிறார்கள். சின்னத்திரை சார்பில் மாபெரும் நடனம் நடைபெறுகிறது..." என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

Comments

Most Recent