மம்முட்டி - மோகன்லாலை விமர்சித்ததால் திலகனுக்கு கொலை மிரட்டல்!

http://thatstamil.oneindia.in/img/2010/02/14-thilakana200.jpg

மலையாள முன்னணி நடிகர்கள் மம்முட்டி - மோகன்லாலை விமர்சித்ததால் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக பிரபல நடிகர் திலகன் புகார் கூறியுள்ளார்.

சிறந்த நடிப்புக்காக தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவர் மலையாள நடிகர் திலகன். நிறைய தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார்.

மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லால் மீது நடிகர் திலகன் சில புகார்களை தெரிவித்தார். இதனால் மலையாள நடிகர்கள் சங்கம், இதுபற்றி பதில் அளிக்குமாறு திலகனுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நிலையில் திலகன் நேற்று ஆலப்புழாவில் உள்ள ஒரு ஓட்டலில் இருந்த போது, அவருடைய செல்போனுக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசியவர்கள், 'இனிமேலும் சூப்பர் ஸ்டார்களுக்கு எதிராக பேசினால், ஒரு வாரத்திற்குள் உன்னை கொன்று விடுவோம்', என்று சொல்லிவிட்டு போனை துண்டித்து விட்டனர்.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், போனில் பேசிய மர்ம நபர்கள் சவுதி அரேபியாவில் இருந்து பேசியது தெரியவந்தது. மேலும் இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் நடிகர்களை விமர்சித்ததால், திலகனுக்கு பட வாய்ப்புகளை முழுமையாக நிறுத்தி விட்டது மலையாளத் திரையுலகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Most Recent