பிரச்சனையில் அ‌ஜித் சுருட்டு

அ‌ஜித்துக்கு எதிராக நேற்று போராட்டத்தை துவக்கினார் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி. சத்யம் திரையரங்குக்கு முன்னால் இந்த போராட்டம் நடந்தது. பிரச்சனை இதுதான். அசல் படத்தில் சுருட்டு பிடிப்பது போல் நடித்திருக்கிறார் அ‌ஜித். அதை நீக்க வேண்டுமாம்.

புகையிலைக்கு எதிராக அன்புமணி போராடி வருவது தெ‌ரிந்த கதை. சினிமாவில் புகை பிடிக்கும் காட்சிகள் கூடாது என்பதற்காக இவர் அமைச்சராக இருந்தபோது நடத்திய கெடுபிடிகள் நாடறியும். இவரது வேண்டுகோளை ஏற்று ர‌ஜினியும், விஜய்யும் புகைப் பிடிக்கும் காட்சியை தங்களது படத்தில் வைப்பதில்லை என முடிவு செய்தது பழைய கதை.

ஆனால் அ‌ஜித் அப்படி எதுவும் சத்தியம் செய்து கொடுக்கவில்லை. அசல் படத்தில் அவர் சுருட்டு பிடிக்கும் காட்சி வருகிறது. போஸ்டர்களிலும் அதனை வெளியிட்டுள்ளனர். குறிப்பிட்ட காட்சியை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்பது அன்புமணியின் வேண்டுகோள். இல்லையென்றால் போராட்டம்.

வருடத்துக்கு 100 படம் வெளியாகிறது. இதில் ஹீரோ புகைப் பிடிப்பது போல் வரும் படங்கள் 99. ஆனால் அ‌ஜித் படத்துக்கு மட்டும் குறி வைக்கிறார்கள் அரசியல்வாதிகள். ஏன்?

யாரோ ஒருவர் புகை பிடிப்பதை எதிர்த்து‌ப் போராடினால் உள்ளூர் பத்தி‌ரிகையில் கூட செய்தி போட மாட்டார்கள். அதனால்தான் பிரபலமாக பார்த்து போராடுகிறார்கள். அட்ரஸ் இல்லாத கட்சிக்கு இலவச செய்தி கிடைத்தது போலாகுமே.

ஆனாலும் போராடுகிறவர்கள் பாபா பெட்டியையே தூக்கியவர்கள்... என்னாகுமோ என்று கவலையில் இருக்கிறது அசல் டீம்.

Comments

Most Recent