மகள் திருமண நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும்


மகள் திருமண நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்க குடும்பத்துடன் சென்று ரஜினிகாந்த் அழைப்பு விடுத்தார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் 2வது மகள் சவுந்தர்யாவின் திருமண நிச்சயதார்த்தம் வரும் 17; தேதி சென்னையில் நடக்கிறது.நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று உற வினர்களுக்கும் முக்கிய பிரமுகர்களுக்கும் இரு வீட்டாரும் நேரில் சென்று அழைப்பு விடுத்து; வருகின்றனர். இந்நிலையில், ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த், மணமகள் சவுந்தர்யா, அவரது சகோதரி ஐஸ் வர்யா உள்ளிட்டோர் மூன்று கார்களில், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வீட்டுக்கு நேரில் சென்று நிச்சயதார்த்த அழைப்பிதழ் கொடுத்தனர். இந்த சந்திப்பு நேற்று மதியம் 2.20; முதல் 2.45 வரை நடந்தது. ஜெயலலிதாவின் வீட்டுக்கு ரஜினிகாந்த் வந்தார் என்று தகவல் கிடைத்து அவரது ரசிகர்களும் அதிமுக பிரமுகர்களும் அங்கு திரண்டனர். அதற்குள் இந்த சந்திப்பு முடிந்து ரஜினி குடும்பத்தார் அவரது வீட்டுக்கு திரும்பி விட்டனர்; ரஜினி குடும்பத்தாரின் திடீர் வருகையால் போயஸ் தோட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது

Comments

Most Recent