புகை பிடிக்கும் காட்சிகள் வேண்டாம்: அஜித்துக்கு ​அன்புமணி கடிதம்




சென்னை,பிப்.2: அஜித் நடித்து வெளியாகவுள்ள "அசல்' திரைப்படத்தில் புகை பிடிக்கும் காட்சிகள் இடம் பெறுவதை தடுக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.இது குறித்து அவர் "அசல்' படத்தின் கதாநாயகன் அஜித்,​​ தயாரிப்பாளர் பிரபு,​​ இயக்குநர் சரண் ஆகியோருக்கு எழுதிய கடிதம் குறித்த விவரம்:சிறுவர்களையும்,​​ இளைஞர்களையும் புகை பிடிக்கும் கொடிய பழக்கத்துக்கு அடிமையாக்க சிகரெட் நிறுவனங்கள் முயல்கின்றன.​ இதற்காக திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சிகள் திட்டமிட்டு திணிக்கப்படுகின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.நடிகர்கள் ரஜினிகாந்த்,​​ கமல்ஹாசன்,​​ விஜய்,​​ சூர்யா ஆகியோர் புகை பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதில்லை என்பதைக் கொள்கையாகக் கொண்டுள்ளனர்.​ ஏ.வி.எம்.​ நிறுவனமும் தங்களது படங்களில் புகை பிடிக்கும் காட்சிகள் இடம் பெறாது என அறிவித்திருக்கிறது.எனவே தமிழக இளைஞர்களின் எதிர்கால நலன் கருதி,​​ "அசல்' படத்தில் மிகக் குறைவான காட்சிகளில் புகை பிடிக்கும் காட்சிகள் இடம் பெற்றிருக்குமானால்,​​ அக்காட்சிகள் படத்தின் கதையம்சத்தில் முக்கியமில்லாததாக இருக்கும் எனில் அவற்றை நீக்கிவிடுங்கள் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Comments

Most Recent