நடிகைகளுக்கு செக்ஸ் தொல்லை: டி.வி. இயக்குனர் பாஸ்கர் மீது குஷ்பு பாய்ச்சல்

 http://thatstamil.oneindia.in/img/2010/02/04-kusboo-cj-baskar200.jpg
சென்னை: பிரபல தொலைக்காட்சி தொடர் இயக்குனரான சி.ஜே.பாஸ்கர். அண்ணாமலை, சித்தி, மனைவி, பெண், அஞ்சலி, கோகுலத்தில் சீதை, சாவித்திரி போன்ற தொடர்களை இயக்கியுள்ளார்.

இவர் தனது தொடர்களில் நடிக்கும் நடிகைகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்து வருவதாக நீண்டகாலமாகவே புகார்கள் உள்ளன. இந் நிலையில் இந்தப் புகார்கள் குறித்து ஆலோசிக்க சின்னத்திரை நடிகர்-நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள், இயக்குனர்கள், எழுத்தாளர்கள் கூட்டமைப்பினரின் கூட்டம் சென்னையில் அவரசமாகக் கூட்டப்பட்டது.

இதில் டிவி நடிகர் சங்கம், டைரக்டர்கள் சங்கம், எழுத்தாளர்கள் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் போன்றவற்றின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இக் கூட்டத்தில் சி.ஜே. பாஸ்கர் இயக்கும் தொடர்களில் இனி யாரும் நடிக்கக்கூடாது என்றும், அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்கக் கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் அவருக்கு இந்தக் கூட்டமைப்பு தடையும் விதித்துள்ளது.

இது குறித்து சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவியான நடிகை குஷ்பு கூறுகையில்,

சி.ஜே.பாஸ்கரால் நடிகைகளும், தயாரிப்பாளர்களும் ஏராளமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். பெண்களுக்கு எதிரான செக்ஸ் கொடுமையில் ஈடுபட்டு வந்த சி.ஜே.பாஸ்கர் மீது நிறைய நடிகைகள் நடவடிக்கை எடுக்க வற்புறுத்தினார்கள். அதன்படி தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. நடிகைகளை சீண்டினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றார்.

சி.ஜே. பாஸ்கர் பெரும்பாலும் சன் டிவிக்காகத்தான் பல்வேறு தொடர்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் இவர் கலைஞர் டிவிக்கு இடம் மாறினார்.

சி.ஜே. பாஸ்கரின் முதல் டிவி தொடர் ராதிகாவின் சித்தி. இதை சன் டிவி ஒளிபரப்பியது. இதில் நாயகியாக நடித்தவர் ராதிகா. முக்கிய பாத்திரத்தில் நீனா, அஞ்சு ஆகியோர் நடித்தனர்.

இதையடுத்து அண்ணாமலை தொடரை இயக்கினார். இதிலும் ராதிகாதான் ஹீரோயின். இருப்பினும் பல இளம் நடிகைகள் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர். இருப்பினும் இதன் பிற்பாதியில் அதிலிருந்து விலகி விட்டார். ராதிகாவுடன் ஏற்பட்ட கருத்து மோதல் இதற்குக் காரணம் எனக் கூறப்பட்டது.

பின்னர் சன் டிவியில் மனைவி தொடரை இயக்கினார். இதில் நாயகியாக நடித்தவர் கெளசல்யா.

அடுத்து சன் டிவியின் இன்னொரு மெகா தொடரான அஞ்சலியையும் இவர் இயக்கினார். இதில் நாயகியாக நடித்தவர் சினிமா நடிகை மல்லிகா. முக்கிய கேரக்டரில் நடித்த இன்னொரு நடிகை தேவிப்பிரியா.

அதேபோல சன் டிவியில் பாஸ்கர் இயக்கத்தில் இடம் பெற்ற இன்னொரு முக்கிய தொடர் பெண். மீரா வாசுதேவன் நாயகியாக நடித்தார்.

கலைஞர் டிவியில் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் கோகுலத்தில் சீதையை தற்போது இயக்கி வருகிறார் பாஸ்கர். இதன் நாயகி முன்னாள் சினிமா நாயகி சங்கவி.

கெளசல்யா, சங்கவி, மல்லிகா ஆகியோரை சின்னத் திரைக்கு அழைத்து வந்தவர் பாஸ்கர்தான்.

இவர்கள் தவிர ப்ரீத்தி, தீபா வெங்கட், மஞ்சரி, யுவராணி, நளினி, லதா, மீரா வாசுதேவன், சீதா, வைஷ்ணவி (தற்கொலை செய்து கொண்டார்), சந்தோஷி, தேவதர்ஷினி, திவ்யதர்ஷினி, தேவி, புவனேஸ்வரி, நீனா, சுஜிதா உள்பட ஏராளமானோர் பாஸ்கரின் இயக்கத்தில் நடித்துள்ளனர்.

Comments

Most Recent