சுறா படப்பிடிப்பில் தகராறு.. கனல் கண்ணனைத் தாக்க முயன்ற பொதுமக்கள்!

http://thatstamil.oneindia.in/img/2010/02/01-kanalkannan200.jpg
சுறா படப்பிடிப்பில் தகராறு.. கனல் கண்ணனைத் தாக்க முயன்ற பொதுமக்கள்!

விஜய் நடிக்கும் 'சுறா' படப்பிடிப்பின்போது பொதுமக்களுக்கும்,​​​ சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணனுக்கும் இடையே தகராறு ​ஏற்பட்டது.​

தூத்துக்குடி கடல் பகுதியில் நடந்த படப்பிடிப்பு தளத்துக்குள் நுழைந்த பொதுமக்கள் கனல் கண்ணனை தாக்க முயன்றனர்.

விஜய் நடிக்கும் சுறா படப்பிடிப்பு தூத்துக்குடி கடல் பகுதியில் நடைபெற்று வருகிறது.​ நேற்று ​தெர்மல்நகர் கடற்கரைப் பகுதியில் கடலில் விழுந்த மீனவர் ஒருவரை கடலோர காவல் படையினர் காப்பாற்றுவது போன்றும்,​​ அதனை மாவட்ட ஆட்சியர் வந்து பார்வையிடுவது போன்றும் காட்சிகள் படமாக்கப்பட்டன.

இந்தப் படப்பிடிப்பை பார்க்க ஏராளமானோர் திரண்டனர்.​ அப்போது பொதுமக்களை ​விலகிச் செல்லுமாறு சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணன் வலியுறுத்தியுள்ளார்.​ ​அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் செல்போனில் பேசிக் கொண்டிருந்தாராம்.​ ​இதைப் பார்த்த கனல் கண்ணன் அந்த நபரிடம் இருந்த செல்போனையும் பறித்து வீசினாராம்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கனல் கண்ணனைச் சுற்றி வளைத்து தாக்க ​முயன்றனராம்.​ இதையடுத்து படப்பிடிப்புக் குழுவினருக்கும்,​​ பொதுமக்களுக்கும் ​கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.​

இது குறித்து தகவல் அறிந்ததும் போலீஸார் சம்பவ​ இடத்துக்கு வந்து பொதுமக்களைச் சமாதானம் செய்துள்ளனர்.​ ​

இச்சம்பவத்தால் சிறிது நேரம் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. பின்னர் தொடர்ந்தது.

Comments

Most Recent