சிங்கமுத்துவின் குடுமிப்பிடியில் விழிபிதுங்கும் வடிவேலு!

வடிவேலு 7 கோடி இழந்த விவகாரத்தில் அவரது சக நகைச்சுவை நடிகரான சிங்கமுத்துவிடமிருந்து எப்படியாவது பணத்தை கரந்து விடவேண்டும் என்று காய்களை நகர்த்திக்கொண்டிருகிறாராம் வடிவேலு. அவர் அனுகிய ஆளும்கட்சி கட்டப்பஞ்சாயத்துக்காரர்கள் சட்டென்று இப்போது பேக் அடித்திருகிறார்கள். காரணம் சிங்கமுத்து சென்னையிலிருந்து தப்பிச் சென்று அடைக்கலம் புகுந்திருப்பது மு.க. அழகிரியின் ஆதரவு நிழலில் என்று மதுரையிலிருந்து நமக்கு நம்பகமான தகவல் கிடைக்கிறது. முதலில் தனக்கு நெருக்கமான சிவகங்கை அதிமுக முன்னாள் அமைச்சரிடம் சரணடைந்த சிங்கமுத்துவை “ உன்னைய இப்போதைக்கு காப்பாத்தி விடுற ஒரே தகுதி அழகிரிக்குதாப்பா இருக்குன்னு சொல்லி அவரே அனுப்பி வைத்தாராம்.”

உடனே தேவர் பேரவை நிர்வாகிகள் சிலருடன் அழகிரியிடம் சென்று அழுது புலம்ப, “உங்கிட்ட என்ன நியாயம் இருக்குன்னு எங்கிட்ட வந்த?” என்று அழகிரி எகிற அப்போதுதான் வடிவேலு பற்றிய பல வண்டவாளங்களை போட்டு உடைக்க, அடக்கடவுளே வடிவேலுக்கு இப்படியோரு மறுபக்கமா என்று அதிர்ந்து போன அழகிரி “சரி   சென்னைக்கு போய் வேலையப் பாரு! மத்தத நான் பார்த்துகிறேன்” அனுப்பியிருகிறார்.

இதன் பிறகே துணிச்சலாக சென்னைக்கு வந்து மறைவிடத்தில் தங்கிவிட்ட சிங்கமுத்து, தனது முன்ஜாமீன் மணு நாளைக்கு(10-பிப்) தள்ளி வைக்கப்பட்டு விட்டதால் தீர்ப்பு வரும்வரை ஒளிந்திருப்பது என்று முடிவு செய்திருகிறாராம். சிங்கமுத்து, வடிவேலுவின் அதிச்சியூட்டும்  மறுபக்கத்திலிருந்து அப்படி என்ன சொன்னார் மதுரையம்பதியிடம்...? வடிவேலுவின் மேனேஜராக இருந்த ஒருவரின் மர்ம மரணம், வடிவேலுவின் தோட்டத்தில் வேலை செய்துவந்த இளம்பெண்ணின் தற்கொலை என்று அவர் சொன்னது சாம்பிள்தானாம்.

இண்ணும் ஆதாரங்களோடு எக்குதப்பாக வடிவேலுவின் ஒவ்வொரு முவ்மெண்ட்டுக்காகவும் காத்திருக்கிறாராம் சரியான நேரத்தில் எடுத்து விட. தமிழக மீடியாவுமும் கண்கொத்திபோல பார்த்துக் கொண்டிருக்கிறது இந்த விவகாரத்தை. பார்க்கலாம் வடிவேலு வைகைப் புயலா?இல்லை பூவா என்று.

Comments

Most Recent