போலி ஆவணம் மூலம் இடம் வாங்கி கொடுத்து ரூ.7 கோடியை மோசடி செய்துவிட்டார் என்று நடிகர் சிங்கமுத்து மீது வடிவேலு புகார் கொடுத்தார். அப்போது நி...
போலி ஆவணம் மூலம் இடம் வாங்கி கொடுத்து ரூ.7 கோடியை மோசடி செய்துவிட்டார் என்று நடிகர் சிங்கமுத்து மீது வடிவேலு புகார் கொடுத்தார். அப்போது நில மோசடி தொடர்பாக ஆவணங்கள் கொடுக்கவில்லை. இதையடுத்து, தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சிங்கமுத்து மீது விருகம்பாக்கம் போலீசில் வடிவேலு மீண்டும் புகார் செய்தார். அதன் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள சிங்கமுத்துவை தேடி வந்தனர். இந்நிலையில், வடிவேலு நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து, கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்தார். நிலம் தொடர்பான ஆவணங்களை ஒப்படைத்தார். அதன்பிறகு கூடுதல் கமிஷனர் ரவி, உளவுத் துறை துணை கமிஷனர் சத்தியமூர்த்தி ஆகியோரை சந்தித்தார். அவர் கொடுத்த ஆவணங்கள் குறித்து மத்தியக் குற்றப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தும்படி கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். மத்தியக் குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் ஸ்ரீதர் விசாரணை நடத்தி வருகிறார்.
Comments
Post a Comment