முதல்வர் விழாவில் ஆட மறுத்தது ஏன்? ப்ரியாமணியின் பதுங்கல்!

தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தமிழ்‌த் திரையுலகம் ஒரணியில் நின்று  (விஜயகாந்த் நீங்கலாக) நாளை பாராட்டு விழா நடத்துகிறார்கள். இது போன்ற பாராட்டு விழா கலைஞருக்கு புதிதல்ல என்றாலும் இம்முறை அலப்பறைகளும் சர்ச்சைகளும் அதிகம்.
இந்த விழாவில் கொலிவுட்டின் முன்னனி நடிகைகளில் த்‌ரிஷா, பாவனா, ஸ்ரேயா,  ப்‌ரியாமணி,  சந்தியா ஆகியோர் மேடையில் நடனம் ஆடப் போவதில்லை என்று மறுத்திருகிறார்கள். இவர்களை கண்டித்திருக்கும் பெப்சி திரைப்பட சங்கம்இ அவர்களின் படங்களுக்கு ஒத்துழைப்பு தரப்போவதில்லை என்று அறிவித்திருகிறது.உண்மையில் ஏன் இவர்கள் ஆட மறுத்திருகிறார்கள்? உண்மை நிலவரம் அறிய சம்பந்தப்பட்ட நடிகையரின் கைபேசி எண்கள், அடுத்து அவர்களின் செய்தித் தொடர்பாளர்கள்,  அவர்களது அப்பாக்கள்,  என்று  ஆரம்பித்த முயற்சியில் எல்லா தொலைபேசிகளுமே அணைத்து வைக்கப்பட்டிருக்க பிரியாமணி மட்டும் சட்டென்று அழைப்பை ஏற்று  துணிச்சலாக “ பிரியாமணி “ என்றார்.

நேரடியாக அவரிடம் விஷயத்துக்கு வந்தோம்.” “ வேண்டாமே சார் ! எப்போ என்ன கிடைக்கும்ண்ணு காத்துகிட்டு இருக்காங்க! உண்மையில எனக்கு கமிடெட் டேட்ஸ். மைசூர் பக்கத்துல கிராமத்துல சூட்டிங். ஃபங்ஷன்ல ஆடனும்னா ஒழுங்கா ஆடனும். அதுக்கு குறைஞ்சது நாலு நாளாவது ரிகர்சல் அவசியம். அவ்ளோ நாள் ஸ்பெண்ட் பண்ண இப்போ முடியல. வேற எந்த காரணமும் இல்ல. இதுக்கு மேல எதுவும் கேக்காதீங்க” என்று பதுங்கியவரை அதற்கு மேல் வலியுறுத்த விரும்பாமல் அவர் நடித்துக்கொண்டிருக்கும் படங்களைப் பற்றி கேட்டோம்.

மணிரத்னம் இயக்கத்தில் "ராவணன்' படத்தை முடித்து விட்டு சமுத்திரகனியின் இயக்கத்தில் தெலுங்கு நாடோடிகள் ரீமேக்கான "சம்போ சிவசம்போ' படத்தையும் முடித்து பெயரிடப்படாத இரண்டு தெலுங்குப் படங்களில் பிஸியாக இருக்கிறாராம் பிரியாமணி.

"மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என ஒவ்வொரு நடிகைக்கும் கனவு இருக்கும். அந்தக் கனவு எனக்கும் இருந்தது. அது "ராவணன்' மூலம் நிறைவேறியதில் ரொம்ப ஹாப்பியா இருக்கேன். படத்தில் என் கேரக்டர் என்னங்கிறதப் பத்தி இப்போ எதுவும் சொல்ல முடியாது. பட் ஒரு சின்ன க்ளூ தறேன். என்னோட பருத்திவீரன் கேரக்டரை மணிசார் பண்ணினா எப்படியிருக்கும் அதுதான்! என்ரவர்இ "நினைத்தாலே இனிக்கும்' மாதிரியான படங்களில் நடிக்க வேண்டும் என எனக்கு ஆசை இருக்கிறது. ஆனால் அது மாதிரி வாய்ப்புகள் எப்போதாவதுதான் அமையுது.
தென்னிந்திய மொழிகள்ல ஆறு மொழிகள் எனக்கு தெரியும். அதனால் அத்தனை  மொழிகளிலும் சொந்தக் குரலில் பேசி நடிக்க வேண்டும் என ஆசை இருக்கிறது. இபோதைக்கு இது போதுமா'' என்ற பிரியாமணி உள்ளிட்ட நடிகைகளுக்கு இதுபோன்ற அரசு சம்பந்தப்பட்ட விழாக்கள் என்றால் அது யார் ஆட்சியில் இருந்தாலும் கசக்கிறது.  விழாவைக் காரணம் காட்டி அதிகாரத்தில் உள்ளவர்களால், பாலியல் சுரண்டலுக்கும்.  நெருக்கடிக்கும் ஆளாக்கப் படுகிறார்கள்.
 நாம் விசாரித்த வகையில்,  இந்த காரணம் எந்த அளவுக்கு உண்மை என்பது ஒருபுறமிருக்க,  முன்னாள் நடிகர் சங்கத் தலைவர்,  இன்னாள் உறுப்பினராக இருக்கும் விஜயகாந்த் ஒரு நாடகத்தில் நடிக்க வேண்டும் என்று பெப்சி கேட்டுஇ அவர் மறுத்து விட்டாராம். அவர் மீது நடவடிகை இருக்குமா என்றால் நிச்சயமாக பதில் ஏமாற்றமாகவே இருக்கும்!

Comments

Most Recent