அனுஷ்காவை புறக்கணிக்கும் நாயகர்கள்



அனுஷ்காவை தமிழின் முன்னணி நாயகர்கள் சிலர் புறக்கணிக்கிறார்கள் என்பது தகவல். தற்‌போது சிங்கம் படத்தில் நடித்து வரும் அனுஷ்கா ஹை ஹீல்ஸ் செருப்பு அணியாமல் சூட்டிங்கில் பங்கேற்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்கும் நாயகரோ ரொம்ப குள்ளமானவர். அனுஷ்காவுக்கு நிகரான உயரத்தை எட்டுவதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஹை ஹீல்ஸ் ஷூ அணிந்து நடித்து வருகிறாராம் அந்த நாயகன். இதேபோல தமிழ்சினிமாவின் இன்னும் சில குள்ள நாயகர்களும் அனுஷ்கா என்றால் அலறி அடித்து ஓட்டம் பிடிக்கிறார்களாம். அதிக சம்பளம் கொடுத்தால் கூட அனுஷ்காவுக்கு ஜோடியாக நடிக்க இமேஜே டேமேஜ் பண்ண விரும்பவில்லை என்று கூறி விடுகிறார்கள் அந்த நாயகர்கள்.
அனுஷ்காவை மறுப்பதற்கு இன்னுமொரு சங்கதியையும் காரணமாக சொல்கிறார்கள் கோடம்பாக்கத்து பட்சிகள். சமீபத்தில் விஜய்யுடன் ஜோடி போட்ட அந்த படம் வெற்றியா, தோல்வியா? என்று அனுஷ்காவிடம் நிருபர்கள் கேட்டபோது, எனக்கு அது முக்கியமே இல்லை. வெற்றி, தோல்வியில் நம்பிக்கையும் இல்லை. கேட்கும் சம்பளம் கொடுத்தால் சொல்லுகிறபடி நடிப்பேன். அதற்காக அந்த படம் ‌கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்று ஆசைப்படுவதுகூட தவறு. நான் சினிமாவில் வேலை பார்க்கிறேன். என்னால் முடிந்தவரை கஷ்டப்பட்டு நடிக்கிறேன். அந்த படத்தின் சூட்டிங் முடிந்ததும், அடுத்த படத்தில் பிஸியாகி விடுவேன். அவ்வளவுதான், என்று வெற்றியின் மீது அக்கறை இல்லாதவர் போல பேசினார். இத‌ன் காரணமாகவும் அம்மணியை ஜோடியாக்க ஆசையிருந்தும் பிரபல ஹீரோக்கள் தயக்கம் காட்டுகிறார்களாம்.

Comments

Most Recent