யுவனின் புதிய அவதாரம்

இசையமைப்பாளர், பாடகர் என்ற அடையாளத்துடள் மேலும் இரு அடையாளங்கள் யுவன் ஷங்கர் ராஜாவை வந்தடைய உள்ளது.

யுவன் தனது தயா‌ரிப்பு நிறுவனம் சார்பில் விரைவில் ஒரு படத்தை தயா‌ரிக்கிறார். புன்னகைப் பூவே படத்தில் யுவனை நடிக்க வைத்த எஸ்.டி.சபா இந்தப் படத்தை இயக்குகிறார். படத்துக்கான பூர்வாங்க வேலைகள் தொடங்கிவிட்டன.

படம் தயா‌ரிக்கும் அதே நேரம் ஹீரோவாக நடிப்பது குறித்தும் தீவிர யோசனையில் இருக்கிறார். பாடலாசி‌ரியர் நா.முத்துக்குமார் சிபா‌ரிசு செய்த உதவி இயக்குனர்கள் இருவ‌ரிடம் யுவன் கதை கேட்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த பிஸி வேலைகளுக்கு நடுவில் இசை ஆல்பம் போடும் பணியிலும் கவனம் செலுத்தி வருகிறார் யுவன். அப்பாவை மிஞ்சினால் சந்தோஷம்தான்.

Comments

Most Recent