அசோகவனம்...கதை சொன்ன பிருத்விக்கு மணிரத்னம் கொடுத்த டெலிஃபோன் திட்டு!

படப்பிடிப்பு  முடிந்து படம் ரிலீஸ் ஆகும்  வரை மீடியாக்களுக்கு படத்தைப் பற்றிய எந்த தகவலையும் பகிர்ந்து  கொள்ளாமல் 'மௌன'ராகம் வாசிக்கும் மணிரத்னத்தின் பாதையை இப்போது கோடாம்பக்கத்தில் கடைப்பிடிக்கும் இயக்குனர்கள் குறைந்து விட்டார்கள். பூஜை அன்றே படத்தின் கதையை பற்றி ஒரளவுக்கு சொல்லி மீடியாவுக்கு தீனி போடத் தயங்குவதில்லை பலரும். ஆனால் மணி மட்டும் படம் முடியும் வரை கிணத்தில் போட்ட அம்மியைப் போல பம்மிக்கொண்டு படமெடுப்பதிலேயே குறியாக இருப்பார்.
  இந்தியிலும், தமிழிலும் மணிரத்னம் தயாரித்து இயக்கிவரும் படம் 'ராவண்'. அபிஷேக்பச்சன், பிரபு, கார்த்திக், விக்ரம், கோவிந்தா, ஐஸ்வர்யாராய், ப்ரியாமணி என பலரும் நடிக்கிறார்கள். 'ராவண்' மொத்த ஷூட்டிங்கும் முடிந்துவிட்டது. மும்பையிலும், சென்னையிலும் எடிட்டிங் பணிகள் நடக்கிறது. இந்தியில் இப்படம் 'ராவண்' என்ற பெயரிலும், தமிழில் 'அசோகவனம்' என்ற பெயரிலும் வெளிவரவிருக்கிறது. 'ராவண்' விளம்ம்பர டிசைனும் ரெடி.

தமிழ் 'ராவண்' படத்தின் டப்பிங் வேலைகள் சென்னையில் நடக்கிறது. ஐஸ்வர்யாராய்க்கு ஜோதிகா டப்பிங் பேசுவார் என்கிறார்கள். மணிரத்னம் இதற்கு முன் இயக்கிய 'குரு' படத்தில் அபிஷேக்பச்சனுக்கு தமிழில் டப்பிங் பேசியவர் சூர்யா. இதனால்  இந்தப் படத்திலும் அபிஷேக்கிற்கு குரல் கொடுப்பவர் சூர்யாவாக இருக்கலாம். தமிழ், ஹிந்தி ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் மே மாதம் கோடைக்கொண்டாட்டமாக வெளியிட திட்டமிட்டு வருகிறார் மணிரத்னம்.
இதற்கிடையில் அசோகவனம் படத்தின் கதையை தனது வலைப்பக்கத்தில் நடிகர் பிருதிவிராஜ் விளையாட்டாக எழுதப்போய்... இதை மணிரத்தினத்திடம் போட்டுக்கொடுத்து விட்டார்களாம் பிருதிவின் வலைதள ரசிகர்காள். விஷயத்தைக் கேள்விப்பட்டு பிருதிவியின் ஃபிளாக் பக்கங்களை பார்த்த மணிரத்தினம் கடுப்பாகி, “ எதுக்கு இந்த வேண்டாத வேலை.” என்று போனில் டோஸ் கொடுக்க “ இல்ல சார் நான் டீடெய்லா எழுதலையே” என்று கதறி விட்டாரம்.  அப்படி என்ன எழுதி விட்டார் பிருத்வி? கீழே படியுங்கள் பிருத்வி அவரது வலைப்பக்கத்தில் குறிப்பிட்டிருக்கும்  கதையை....!

“ராமாயணத்தில் இடம் பெற்ற அசோகவனம் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ரெடியாகி இருக்கிறது ''தனது தங்கையின் மரணத்திற்கு காரணமான போலீஸான ராமை (ப்ருத்விராஜ்) பழிவாங்க காத்திருகிறான் ராவண் (விக்ரம்),  ராம் (ப்ருத்விராஜ் மற்றும் ஐஸ்வர்யாராய் காதலித்து திருமணம் செய்தவர்கள்...) திருமணம் நடந்து அடுத்த நாள் ராவணனால் கடத்தப்படுகிறார் ஐஸ்.
ப்ருத்விராஜ் பற்றி விக்ரம் மூலம் அறிந்து கொள்ளும் ஐஸ், ராவணனின் நன்நடத்தையைப் பார்த்து அவன் மேல் காதல் கொள்கிறாள்.. மனைவியை மீட்க வரும் பிருதிவியிடம் தொற்றுப்போகும் விக்ரமிடமிருந்து ஐஸ்வர்யாவை அழைத்து செல்ல முயலும்போது விக்ரமை விட்டு வர மறுக்கிறார் ராய்!  பிருதிவியின் ப்ளாக்கில் இப்படி இருக்கிறது அசோகவனத்தின் கதை. ஏம்பா பிருத்வி! இப்படி மொத்த திரைக்கதையும் எழுதினா திட்டாம கொஞ்சவா செய்வாரு?

Comments

Most Recent