இந்தியில் நடித்தாலும் தமிழில் தொடர்வேன்இந்தியில் சித்தார்த் ஜோடியாக “ஸ்டிரைக்கர்” என்ற படத்தில் நடித்துள்ளார் பத்மப்ரியா. இப்படம் கடந்த வாரம் ரிலீசானது. இதுபற்றி பத்மப்ரியா கூறியதாவது:
இந்தப் படத்தில் பார் ஓனராக நடித்துள்ளேன். எனது முதல் இந்திப் படம். என் நடிப்பை பாராட்டி, விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. இந்தியில் ஒரு படத்தில் நடித்துவிட்டதால் தொடர்ந்து இந்தியில் நடிப்பீர்களா என்கிறார்கள். அப்படியெதுவும் இல்லை. தென்னிந்திய மொழிகளில் நடிப்பதையே விரும்புகிறேன். இந்தியில் வாய்ப்பு கிடைத்தால் அங்கும் நடித்துக்கொண்டிருப்பேன். இன்னும் 3 மாதத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நான் நடித்துள்ள 5 படங்கள் ரிலீசாக இருக்கிறது. இதை சந்தோஷமாக உணர்கிறேன். அதற்காக அதிகமான படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் எனக்கில்லை. நல்ல கேரக்டர் கிடைத்தால் மட்டுமே நடிப்பேன். நல்ல நடிகை என்ற பெயரை தக்கவைப்பதே எனது ஆசை என்றார் பத்மப்ரியா

Comments

Most Recent