தில்லாலங்கடிப் படத்தில் ஒரே ஷாட்டில் ஒரு பாடல் காட்சியை எடுத்துள்ளனர். ரசிகர்களை திரையரங்குக்கு வரவழைக்கவே இதுபோன்ற புதுமையான காட்சியை யோச...
தில்லாலங்கடிப் படத்தில் ஒரே ஷாட்டில் ஒரு பாடல் காட்சியை எடுத்துள்ளனர். ரசிகர்களை திரையரங்குக்கு வரவழைக்கவே இதுபோன்ற புதுமையான காட்சியை யோசித்ததாக படத்தின் இயக்குனர் ஜெயம் ராஜா தெரிவித்தார்.
தில்லாலங்கடி தெலுங்கில் வெளியான கிக் படத்தின் ரிமேக். ஜெயம் ரவி, தமன்னா, ஷாம் நடித்து வருகின்றனர். இதில் ரவி, தமன்னா இடம்பெறும் ஒரு பாடல் காட்சியைதான் ஒரே ஷாட்டில் எடுத்துள்ளனர். நீரோ என்ற ஸ்பெஷல் கேமரா, ஆஸ்திரேலிய தொழில்நுப்படக் கலைஞர் பல நாட்கள் நடன ஒத்திகை ஆகியவை இந்தப் பாடலுக்கு தேவைப்பட்டிருக்கிறது.
சொன்னப் பேச்சை கேட்காத சுந்தரி என்று தொடங்கும் இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்திருப்பவர் ஷோபி.
ஓரே ஷாட்டில் ஒரு முழுப்படத்தையே ரஷ்ய இயக்குனர் அலெக்ஸாண்டர் சுக்ரோவ் எடுத்துள்ளார். 2002ல் இவர் இயக்கிய ரஷ்யன் ஆர்க் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது. 99 நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்துக்காக ஏறக்குறைய எட்டு மாதங்கள் ஒத்திகை பார்க்கப்பட்டது.
Comments
Post a Comment