China rejected Jeeva's Visa

ஜீவாவுக்கு சீனா விசா மறுப்பு!

 http://thatstamil.oneindia.in/img/2010/02/15-jeeva200.jpg

நடிகர் ஜீவாவுக்கு விசா மறுத்துவிட்டது சீனத் தூதரகம். இதனால் கோ படத்தின் ஷூட்டிங்குக்காக அவரால் சீனா போக முடியவில்லை.

கேவி ஆனந்த் இயக்கும் புதிய படம் 'கோ'. இந்தப் படத்தில் முதலில் சிம்பு நாயகனாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அவருக்கும் இயக்குநர் கேவி ஆனந்துக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக, ஷூட்டிங்குக்கு கிளம்பவிருந்த நேரத்தில் படத்தில் நடிக்கவில்லை என்று அறிவித்து விட்டார் சிம்பு.

இதைத் தொடர்ந்து இந்தப் படத்தின் நாயகனாக ஜீவாவை ஒப்பந்தம் செய்தார் கே வி ஆனந்த்.

சீனாவின் வடபகுதியில் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடப்பதாகத் திட்டமிடப்பட்டது. இந்தப் பகுதி மங்கோலியாவின் எல்லைப் புறத்தில் வருகிறதாம். ஆனால் முதலில் சிம்புவுக்கு விசா கேட்டபோது உடனே வழங்கிய சீன அரசு, இப்போது ஜீவாவுக்கு விசா மறுத்துவிட்டதாம்.

காரணம் என்னவென்று தெரிவிக்கப்படவில்லை என்கிறார்கள். இதுகுறித்து கருத்து தெரிவிக்க ஆனந்த் மற்றும் ஜீவா இருவருமே மறுத்துவிட்டனர்.

இப்போதைக்கு படத்தின் படப்பிடிப்பு துவங்கிவிட்டதாகவும், ஜீவா - கார்த்திகா சம்பந்தப்பட்ட பாடல் காட்சிகள் படமாக்கப்படுவதாகவும் அறவிக்கப்பட்டுள்ளது.

Comments

Most Recent