எந்திரன் '3 டி' - திருட்டு வி.சி.டி.யில் வெளியாகாமல் தடுக்க சரத்குமார் நடித்த 'ஜக்குபாய்' படம் ரிலீசுக்கு முன்பே திருட்டு வி...
எந்திரன் '3 டி' - திருட்டு வி.சி.டி.யில் வெளியாகாமல் தடுக்க
சரத்குமார் நடித்த 'ஜக்குபாய்' படம் ரிலீசுக்கு முன்பே திருட்டு வி.சி.டி.யில் வெளியாகி திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்தது.
எனவே புதுப்படங்களின் 'டப்பிங்', 'மிக்சிங்' பணிகள் கடும் கண்காணிப்பில் நடக்கின்றன. “ராவணன்” பட வேலைகள் நடக்கும் ஸ்டூடியோக்களில் தனது ஆட்களை நிறுத்தி வைத்துள்ளார் மணிரத்னம்.
ரஜினியின் 'எந்திரன்' படம் மெகா பட்ஜெட்டில் தயாராகிறது. இப்படம் திருட்டு வி.சி.டி.யில் வெளியாகாமல் தடுக்க கண்ணும் கருத்துமாய் பாதுகாக்கிறார் ஷங்கர்.
'3 டி' தொழில் நுட்பத்தில் படம் எடுத்தால் அதை டி.வி.யிலோ, மானிட்டரிலோ பார்க்க முடியாது. தியேட்டரில் வந்துதான் பார்க்க வேண்டும். எனவே 3 டி தொழில் நுட்பத்தில் “எந்திரன்” படத்தை வெளியிட ஷங்கர் திட்டமிட்டுள்ளார்.
இதுபற்றி அவர் கூறியதாவது,
“எந்திரன்” படத்தின் ஒரு பகுதியை “3 டி”யாக மாற்ற ஆலோசனை நடந்து வருகிறது. எந்த ஒரு 2 டி படத்தையும் 3 டியாக மாற்றும் அளவுக்கு இன்றைய தொழில் நுட்பம் வளர்ந்துள்ளது. உலகெங்கும் உள்ள பல முன்னணி கிராபிக்ஸ் நிறுவனங்கள் இந்த பணியில் சிறந்து விளங்குகின்றன.
எந்திரனுக்கு கிராபிக்ஸ் செய்பவர்கள் எந்திரன் படத்தின் “டெமோ 3 டி”யை எனக்கு போட்டு காண்பித்தனர். ரொம்ப அசத்தலாக இருந்தது. விரைவில் இது
குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என்றார் ஷங்கர்.
Director Shankar is planning a 3D version of the magnum opus ‘Endhiran’ to pre-empt any piracy attempt.
After the unpleasant episode in ‘Jaggubhai’, where the full length film was leaked on the internet even before it came out of the processing lab, Shankar is trying each and every way to plug the holes. Today all major films are happening under strict vigilance by competent persons. Mani Ratnam has appointed managers at each point where the works for ‘Raavan’ is happening.
So in a no holds barred attempt to make the audience watch ‘Endhiran’ only at theaters, Shankar is even contemplating to convert a part of ‘Endhiran’ film into a 3D version. He has already started consultations to this effect with the experts on the economics of converting the film into a 3D film.
The demo version of ‘Endhiran’ in 3D was shown to Shankar by an effects company and he is awfully impressed with the result.
So the chances to see ‘Endhiran’ wearing the 3D spectacles are great.
Comments
Post a Comment