' எந்திரன்' படத்தின ் சி ல தொழில்நுட் ப வேலைகள ் தற்போத ு நடைபெற்ற ு வருகின்றன என்றும் ஜூல ை மாதம ் படம ் வெளியாகும் என்ற...
'எந்திரன்' படத்தின் சில தொழில்நுட்ப வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன என்றும் ஜூலை மாதம் படம் வெளியாகும் என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
முதலமைச்சர் கருணாநிதியை இன்று நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், என் மகள் சௌந்தர்யா நிச்சயதார்த்தத்திற்கு முதல்வர் குடும்பத்தோடு வந்து ஆசி வழங்கினார். அவருக்கு நன்றி தெரிவிப்பதற்காக இன்று காலை சந்தித்து பேசினேன் என்றார்.
‘எந்திரன்’ படம் எப்போது வெளியாகும் என்ற கேள்விக்கு பதில் அளித்த ரஜினிகாந்த், படத்தின் சில தொழில்நுட்ப வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஜூலை மாதம் படம் வெளியாகும் என்றார்.
அண்மையில் நடந்த திரைப்படத்துறை பாராட்டு விழாவில் நடிகர் அஜீத் பேசியது பற்றி உங்கள் கருத்து என்ன என்ற மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த அவர், அது அவருடைய உரிமை. அவருடைய கருத்தை தெரிவித்திருக்கிறார். அதற்காக அவரை நான் பாராட்டுகிறேன்.
நடிகர், நடிகைகளை விழாவுக்கு வரும்படி அழைக்கப்படுகிறார்கள். ஆனால் வர வேண்டும் என்று யாரும் நிர்ப்பந்தம் செய்வதில்லை. அவர்களாகவே விரும்பித்தான் போராட்டங்கள், உண்ணாவிரதம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள். முதல்வர் கருணாநிதி பல்வேறு போராட்டங்களை சந்தித்தவர். அவர் யாரையும் நிர்ப்பந்தம் செய்து அழைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
60 வயதிலும் கதாநாயகனாக நடிக்கிறீர்களே என்ற கேள்விக்கு பதில் அளித்த ரஜினிகாந்த், தமிழ் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வதால், அவர்கள் என் மீது அன்பு செலுத்துவதால் 60 வயதிலும் கதாநாயகனாக நடிக்கிறேன் என்றார்.
Superstar Rajinikanth today met the Tamil Nadu chief minister M. Karunanidhi at his residence and expressed thanks for his presence at the engagement ceremony of his daughter yesterday. Superstar’s younger daughter Soundarya was engaged to a city businessman Ashwin Ramkumar in a simple ceremony yesterday at a city hotel. The chief minister was present with his entire family to bless the to-be married couple.
While coming out of CM’s residence Rajinikanth told, actors attend filmy functions only on their own will and not out of compulsions from anybody. On ‘Endhiran’ the superstar said the film would be ready for release in July in all probability.
Comments
Post a Comment