திரைப்பட "ஸ்டண்ட் மாஸ்டர்' ஜாக்குவார் தங்கத்தின் வீடு மற்றும் கார், அடையாளம் தெரியாத நபர்களால் வியாழக்கிழமை தாக்கப்பட்டது. இது த...
திரைப்பட "ஸ்டண்ட் மாஸ்டர்' ஜாக்குவார் தங்கத்தின் வீடு மற்றும் கார், அடையாளம் தெரியாத நபர்களால் வியாழக்கிழமை தாக்கப்பட்டது. இது தொடர்பாக நடிகர் அஜீத் மீது ஜாக்குவார் தங்கம், போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். இது குறித்த விவரம்: ஜாக்குவார் தங்கத்தின் வீடு சென்னை எம்.ஜி.ஆர். நகர் அண்ணல் காந்தியடிகள் தெருவில் உள்ளது. படப்பிடிப்பு ஒன்றில் பங்கேற்க ஜாக்குவார் தங்கம் மதுரை சென்றிருந்தார். இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை 2 மணிக்கு அவரது வீடும், காரும் தாக்கப்பட்டதாக போலீஸôருக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக எம்.ஜி.ஆர். நகர் போலீஸôர் விசாரித்து வருகின்றனர். தாக்குதல் குறித்து அறிந்து மதுரையில் இருந்து வியாழக்கிழமை பிற்பகலில் சென்னை திரும்பிய ஜாக்குவார் தங்கம், மாநகரப் போலீஸ் கமிஷனர் டி. ராஜேந்திரனை மாலையில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார். "எனது வீட்டைத் தாக்கியவர்கள், நடிகர் அஜீத்தின் மேலாளர் மற்றும் ரசிகர் மன்ற நிர்வாகிகள் என்று தெரிகிறது. எனவே இந்த விவகாரத்தில் அஜீத் உள்ளிட்ட அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment