Jayam Raja out of Vijay's film?

http://thatstamil.oneindia.in/img/2010/02/12-vijay-1-200.jpg
விஜய்யின் 51 வது படத்தை ஜெயம் ராஜா இயக்குவார் என்று கூறப்பட்டது. இயக்குநர் ராஜா மற்றும் விஜய் இருவருமே அதை உறுதிப்படுத்திய நிலையில், 51வது படத்தை சித்திக் இயக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடிகார்ட் மலையாளப் படத்தை அவர் ரீமேக் செய்யப் போகிறார் விஜய்க்கு ஏற்ற மாதிரி.

அப்படியானால் ராஜாவின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்தது.

சித்திக் படத்துக்குப் பிறகு ஷங்கர், பிரபு தேவா, பேரரசு படங்கள் விஜய்க்கு காத்திருப்பதால், ஜெயம் ராஜா இயக்கத்தில் அவர் நடிப்பது கேள்விக் குறியாகியுள்ளது.

மேலும் ரீமேக்கில் கில்லாடியான ராஜா, விஜய்க்கு ஒரு ஒரிஜினல் கதை சொல்ல அது அவருக்குப் பிடிக்கவில்லையாம். 'இன்னும் நல்ல அதிரடியான கதை வேணும்.. குறிப்பாக, ரிஸ்க் இல்லாத ரீமேக் படமா இருந்தா பெட்டர்' என்று விஜய் கூறியதால், அதற்காக அவர் மெனக்கெட்டு பல தெலுங்கு படங்களை தேடிக் கொண்டிருந்த வேளையில்தான், சித்திக்கைப் பிடித்து விட்டார் விஜய்.

இதுகுறித்து ராஜா தரப்பில் விசாரித்தபோது, இப்போதைக்கு அவர் தில்லாலங்கிடியில் பிஸியாகி விட்டதாகவும், விஜய் படம் குறித்து சொல்ல ஒன்றுமில்லை என்றும் கூறப்பட்டது.

Comments

Most Recent