க ி ரீடம், பொய் சொல்லப் போறோம் படங்களை இயக்கிய விஜய்யின் அடுத்தப் படம், மதராசப்பட்டணம். ஆர்யா நடித்திருக்கும் இந்தப் படம் சுதந்திரத்துக...
கிரீடம், பொய் சொல்லப் போறோம் படங்களை இயக்கிய விஜய்யின் அடுத்தப் படம், மதராசப்பட்டணம். ஆர்யா நடித்திருக்கும் இந்தப் படம் சுதந்திரத்துக்கு முந்தையை காலகட்டத்தை பின்புலமாகக் கொண்டது.
வராலாற்றுப் பின்னணியில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் பழைய மதராசப்பட்டணத்தை - தற்போதைய சென்னையை அப்படியே மறுஉருவாக்கம் செய்திருக்கிறார்கள். கூவம் நதி தேம்ஸ் அளவுக்கு சுத்தத்துடன் படத்தில் வருகிறது.
சுதந்திர காலகட்டம் என்றாலும் இப்படம் சுதந்திரப் போராட்டத்தை மையப்படுத்தவில்லை. இதுவொரு தமிழ் இளைஞனின் காதல் கதை.
வித்தியாசமான கதையமைப்பு, வரலாற்றுப் பினனணி என்று தயாராகியிருக்கும் இப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று திரைக்கு வருகிறது.
Comments
Post a Comment