Maniratnam Ravan Picture- அசோகவனம் டிசைன்...! உங்கள் பார்வைக்கு முதன் முதலாக...!

மணிரத்னம் தயாரித்து  இயக்கிவரும் இருமொழிப் படமான 'ராவண்'. இந்தியில் 'ராவண்' என்ற பெயரிலும், தமிழில் 'அசோகவனம்' என்ற பெயரிலும் ரிலீஸ் ஆக இருக்கிறது. கடைசியாக பொள்ளாச்சி காட்டுப்பகுதியில் நடந்த 10 நாள் ‘பேச் ஒர்க்’ படப்பிடிப்போடு 'ராவணின்' மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிட்டது. மும்பையிலும், சென்னையிலும் தற்போது எடிட்டிங் மற்றும் டப்பிங் பணிகள் நடந்து வருகிறது. தமிழ் 'ராவண்' படத்தின் டப்பிங் வேலைகள் சென்னையில் நடக்கிறது. ஐஸ்வர்யாராய்க்கு ஜோதிகா டப்பிங் பேசுவார் என்கிறார்கள். மணிரத்னம் இதற்கு முன் இயக்கிய 'குரு' படத்தில் அபிஷேக்பச்சனுக்கு தமிழில் டப்பிங் பேசியவர் சூர்யா. இந்தப் படத்திலும் அபிஷேக்கிற்கு குரல் கொடுப்பவர் சூர்யாவாக இருக்கலாம் என்கிறது மெட்ராஸ் டாக்கீஸ் வட்டாரம்.

கேரளாவில் உள்ள அடர்ந்த காடுகளிலும், சாலக்குடி அருவியிலும் ஷூட்டிங் நடந்திருக்கிறது. சாலக்குடி அருவி அருகே பல லட்ச ரூபாய் செலவில் போடப்பட்ட செட் அப்போது பெய்த பருவ மழையில் முழுவதுமாக அடித்து செல்லப்பட.. அதே செட்டை மீண்டும் போட்டு படப்பிடிப்பை தொடர்ந்திருகிறார் மணிரத்தினம்.

முதல்வர் விழாவுக்கு வந்த விக்ரமை நிருபர்கள் மடக்கி ராவண் படம்பற்றி எதாவது செய்தி கொடுஙக் என்று கேரோ செய்ததில், அபிஷேக் - ஐஸ்வர்யாவுடன் நடித்த அனுபவம் பற்றி கொஞ்சமாய் பகிந்துகொண்டார்.
''அபிஷேக்கை எனக்கு ரொம்ப நாளா தெரியும். நாங்க நல்ல ஃப்ரெண்ட்ஸ். அபிஷேக் ரொம்ப கலகலப்பான ஆளு. அவரோட ஷாட் முடிஞ்சாலும் உடனே கேரவனுக்குள் போகமாட்டார். என் ஷாட் எடுக்கும் போதும் காமிராவுக்கு பின்னால் இருப்பார். மலை, பாறைகள்ல ஷூட் பண்றப்ப 'கென்னி சார், பார்த்து காலடி எடுத்து வைங்க. இது ஆபத்தான இடம்.., 'ரொம்ப கவனம்' இப்படியெல்லாம் அக்கறையா கவனிச்சுப்பார்.
''இந்த சீன்ல உங்களுக்கு கண்ணுல தண்ணி வரவைக்க கிளீசரின் வேண்டியிருக்காது. ஏன்னா, இது நீளமான ஷாட். அது எடுத்து முடிக்கிறதுக்குள்ல உங்களுக்கு கண்ணுல கண்ணீர் வந்துடும்ன்னு காமெடியா கலாய்ப்பார். ஐஸ்வர்யா கூட வொர்க் பண்றது கஷ்டமாக இருந்துச்சு. காரணம், அவங்க உலக அழகி மட்டுமல்ல, மக்கள் உன்னிப்பா கவனிச்சுட்டு இருக்கற ஒருத்தர். அதனால அவங்க கூட சகஜமா இருக்க முடியலை.. ஆனால் அவங்க தொழில் ரீதியா நல்லா தெளிவா இருக்கிறவங்க.. மணிரத்னம் சார் படத்தில நடித்தது ஒரு மறக்க முடியாத அனுபவம்'' என்றார்.
ஹாலிவுட்டும் உலக சினிமாவும் இந்த படத்தைக் கொண்டாட வேண்டும் என்று நினைத்த மணிரத்னம்,பணத்தைப் பற்றி கவலைப்படாமல் நிறைய செலவுகள் செய்துள்ளாராம். பிரமாண்டமாக செலவழித்த தொகை ஃபிரேமில் தெரியும். இதற்கு ஒரு உதாரணம் சொல்கிறார்கள்..
கதைப்படி விக்ரமின் கட்டுப்பாட்டில் காட்டில் இருக்கும் ஐஸ்வர்யாராயை , விக்ரம் இல்லாத நேரத்தில் 4 ஓநாய்கள் வேட்டையாட வர, உயிரை காப்பற்றிக்கொள்ள ராய் ஒட...ஒநாய்கள் துரத்த என்று மணி படம் பிடித்த சேஸிங் படத்தில் பேசப்படும் பகுதிகளில் ஒன்றாக இருக்குமாம். இதற்க்காக ஓநாய்களைப் போல தோற்றம் கொண்ட ஆஸ்த்ரேலிய வகை நாய்களை வரவழைத்திருக்கிறார்கள். இந்த நாய்களுக்கு, பயிற்சியாளருடன் சேர்ந்து செய்த செலவு மட்டுமே மூன்று கோடி ரூபாய்!

கொல்கத்தாவில் நடந்த ஷூட்டிங் நடந்த லொக்கேஷன்களில் அதிகமாக தூசு பறக்க.. விக்ரம், ஐஸ், மணி எல்லோரும் பயங்கரமாக தும்மிக்கொண்டே இருந்திருக்கிறார்கள். கேரளா காடுகள், கொல்கத்தா ஹூப்ளி ஆற்றங்கரை, மத்தியப்பிரதேச பனிமூட்டம்.. ஊட்டி ஆகிய இடங்களில் ஷூட்டிங் நடந்திருக்கிறது.
இந்த லொக்கேஷன்களின் கொள்ளை அழகு அபிஷேக்கிற்கும், ஐஸ்ஸுக்கும் பிடித்துப்போய்விட.. இருவரும் ஜோடியாக சேர்ந்து தங்களது காமிராவில் ஷூட் செய்து, ஃபேமிலி ஆல்பம் ரெடிசெய்திருக்கிறார்களாம்.

அபிஷேக்குடன்  சில காட்சிகளில் மட்டும் நடித்திருக்கும் ப்ரியாமணிதான் சூர்ப்பனகையை ஒத்த பாத்திரத்தை ஏற்று நடித்திருகிறாராம். இந்தி நடிகர் கோவிந்தா, கேரக்டர் சஸ்பென்ஸாக வைக்கப்பட்டிருக்கிறது. பிரபு ஐஸ்வர்யாவின் அப்பாவாக நடித்திருகிறார். கேரளாவில் உள்ள சாலக்குடி அருவியில் அதிகாலை சூரிய உதயம் அற்புதமாக இருக்கும் என்பதால், இந்த சூரிய உதயத்தை எடுப்பதற்காக தினமும் அதிகாலை இரண்டு மணியிலிருந்து நான்கு மணிவரை தொடர்ந்து ஐந்து நாட்கள் சூரியனுக்காக காத்திருந்து உதயத்தை படம்பிடித்திருக்கிறார்.
படத்தில் சில நொடிகளே இடம்பெறும் ஒரு ஷாட்டிற்கே  மணிரத்தினம் இத்தனை மெனக்கெட்டிருக்கிறார் என்றால் ஒவ்வோரு பிரேமையும் எப்படி செதுக்கியிருப்பார் என்பதை உங்கள் யூகத்துக்கே விட்டு விடுகிறோம்..
இறுதியாக ஒரு இனிப்பான செய்தி. அசோகவனம், ராவண் இரண்டுமே மே-21 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது என்கிறார்கள். அதற்க்கு முன் அசோகவனம் போஸ்டர் டிசைன் உங்கள் பார்வைக்கு  முதன் முதலாக....!

Comments

Most Recent