அஜீத்துக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ்! ஜாகுவார் தங்கம் என்பவர் வீட்டில் நடந்த தாக்குதல் தொடர்பாக நடிகர் அஜீத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது சர...
அஜீத்துக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ்!
ஜாகுவார் தங்கம் என்பவர் வீட்டில் நடந்த தாக்குதல் தொடர்பாக நடிகர் அஜீத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது சரத்குமார் தலைமையிலான நடிகர் சங்கம்.
அஜீத் விவகாரம் முழுமையான அரசியலாகிவிட்டது.
சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் வீட்டில் நேற்று முன்தினம் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினராம். வீட்டின் முன்னால் நிறுத்தியிருந்த கார் கண்ணாடி இதில் உடைந்து.
இதை நடத்தியவர்கள் அஜீத் மற்றும் அவரது ரசிகர்கள்தான் என்று போலீசில் புகார் கூறினார் ஜாகுவார் தங்கம்.
விசாரித்த போலீஸார், இந்த தாக்குதலுக்கும் அஜீத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்து அவர் பெயரை வழக்கில் சேர்க்காமல் விட்டனர்.
இதில் பெரும் ஏமாற்றமடைந்த தங்கம், தொடர்ந்து இரண்டு பிரஸ் மீட்டுகள் நடத்தி நிருபர்களிடம் ரஜினிகாந்த் மற்றும் அஜீத் பற்றி மிக மோசமாக பேட்டியளித்தார்.
நேற்று மாலை நடிகர் சங்கத்துக்கு சென்ற ஜாகுவார் தங்கம், நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரை சந்தித்து அஜீத் மீது புகார் மனு கொடுத்தார். அஜீத் தூண்டுதலில் அவரது ரசிகர்கள் என் வீட்டில் தாக்குதல் நடத்தி உள்ளனர் என்றும் அஜீத் மீது நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
ஜாக்குவார் தங்கம் சில படங்களில் நடித்திருப்பதால் நடிகர் சங்கத்திலும் உறுப்பினராக உள்ளாராம். சங்க உறுப்பினர் என்ற வகையில் அவரது மனுவை நடிகர் சங்கம் பரிசீலித்து, அஜீத்திடம் விளக்கம் கேட்க முடிவு செய்துள்ளது.
இதையடுத்து அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கு அஜீத் பதில் அனுப்பியதும் அதை பரிலீசித்து நடிகர் சங்கம் உரிய நடவடிக்கை எடுக்குமாம்.
Comments
Post a Comment