Nayanthara - Prabhu Deva chilling at Europe

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiq2knAQpYZTMfzmhHidFP-LGoB2_gA56kiw8VU3QA6R05ZD-iTnE0NfkVv4bShYSYCTtwmFcfQkZn09eqWwAzZEllBGqzuYt_hRszC4kEbM1GOaiO-zVzeoTMkix46495rxTnP6G1LBwZN/s400/prabhudeva_nayanthara_villu-shooting-stills.jpg
மனைவியையும் குழந்தைகளையும் கழற்றிவிட்டு, (கள்ளக்) காதலி நயன்தாராவுடன் உலகம் சுற்றத் தொடங்கிவிட்டார் பிரபுதேவா.

திருமணம் செய்து கொள்ளாமலே கணவன்-மனைவி போல் இந்த இருவரும் வாழ்ந்து வருகிறார்கள். பத்திரிகையாளர்கள், தெரிந்தவர்கள் யாரையாவது பார்த்துவிட்டால் ஓடி ஒளிகிறார்கள். மீடியாக்கார்கள் கேட்டாலும் இந்த விவகாரத்தை மூடி மறைத்து மழுப்புகிறார்கள்.

நயன்தாரா திருமணம் ஆகாதவர். பிரபுதேவாவுக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். நயன்தாராவுடன், பிரபுதேவா தொடர்பு வைத்திருப்பது பிரபுதேவா குடும்பத்தில் புயலை கிளப்பியது. அவருடைய மனைவி ரமலத், "நயன்தாராவை எங்கே பார்த்தாலும் அடிப்பேன்" என்று எச்சரித்தார்.

அதை தொடர்ந்து பிரபுதேவா மனைவி ரமலத்தை சமாதானம் செய்து பார்த்தார். நயன்தாராவை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொள்வதற்கு ரமலத்திடம், பிரபுதேவா சம்மதம் கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு ரமலத் சம்மதிக்கவில்லையாம். எனவே சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசனை செய்து நயன்தாராவை இரண்டாம் திருமணம் செய்து கொள்வதில் தீவிரமாக உள்ளாராம் பிரபு தேவா.

இந் நிலையில் நயன்தாராவும், பிரபுதேவாவும் ரகசியமாக துபாய் போய் இருக்கிறார்கள். துபாயில், நயன்தாராவின் அண்ணன் வசிக்கிறார். அவருடைய வீட்டில் இருவரும் 3 தினங்கள் தங்கினராம்.

பின்னர் அங்கிருந்து இருவரும் ஜோடியாக பிரான்சு பயணமாகியுள்ளனர். கல்பாத்தி அகோரம் தயாரிக்க, ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தை பிரபுதேவா இயக்குகிறார். அந்த படப்பிடிப்புக்கான இடங்களை பிரபுதேவா, பிரான்சில் தேர்வு செய்கிறார்.

அதன்பிறகு நயன்தாராவும், பிரபுதேவாவும் சுவிட்ஸர்லாந்து, நார்வே, ஸ்வீடன் போன்ற நாடுகளில் சுற்றுப்பயணம் செய்கிறார்களாம். இன்னும் 10 நாட்களுக்கு ஐரோப்பாவில்தான் இந்த இருவரும் முகாமிட்டிருப்பார்களாம்.

Comments

Most Recent