Now Theater owners against Ajith

http://thatstamil.oneindia.in/img/2010/02/20-ajith-2000.jpg
அஜீத் இயல்பாகப் பேசிய ஒரு விஷயத்தை முடிந்தவரை அரசியலாக்கி விளம்பரம் தேடும் முயற்சியில் முழுவீச்சில் குதித்துவிட்டது கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சிலர்.

இவர்களில் புதிதாக ஒருவர் குதித்துள்ளார்.. அவர் பெயர் பன்னீர் செல்வம். தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் இவர். இவர்தான் ரிலீஸான முதல் நாளே குசேலன் அவுட் என்று கொடி பிடித்து பணத்தை திரும்பக் கேட்டவர் என்பது கூடுதல் தகவல்.

இப்போது அஜீத் படத்தை இனி தமிழகத்தில் திரையிடுவதா, வேண்டாமா? என்பதை மார்ச் 3ம் தேதி நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்வோம் என்று புதிய பிரச்சினையைக் கிளப்பியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கை இது:

"தமிழர்களை வைத்து சம்பாதித்த நடிகர் அஜீத்குமார், தமிழர்களுக்கு எதிராக பேசி வருகிறார். காவிரி நீர் பிரச்சனைக்காக நடைபெற்ற போராட்டத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருக்கிறார்.

அவர் சோர்வாக இருந்தால், நடிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டியதுதானே... தொடர்ந்து ஏன் நடிக்க வேண்டும்?

அஜீத் தன் கருத்தை திரும்ப பெற வேண்டும். மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த பிரச்சினை பற்றி விவாதிக்க மார்ச் 3ம் தேதி, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது.

அஜீத் படத்தை திரையிடுவதா, வேண்டாமா? என்பதை அந்த கூட்டத்தில் முடிவு செய்வோம் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

Comments

Most Recent