Ramya Krishnan to do negative role again


படையப்பா, ஆறுமுகம் ஆகிய படங்களில் வில்லி வேடங்களில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மேலும் ஒரு புதிய படத்தில் வில்லியாக நடிக்கிறார். அந்த படத்தின் பெயர், கம்பன்.
இதில், கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்ற சத்யா கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அறிமுகம் ஆகிறார் சண்டிகார் அழகி நவரத்னா. இவர்களுடன் சுமன், சரண்ராஜ், கோட்டா சீனிவாசராவ், டி.பி.கஜேந்திரன், வெ.ஆ.மூர்த்தி, செந்தில், பாண்டு, வையாபுரி, சாப்ளின் பாலு, பெசன்ட்நகர் ரவி, ரம்யா கிருஷ்ணன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
வணிகமயமாகி விட்ட கல்வியின் நிலைக்கு எதிரான கதை இது. படத்தின் கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டராக அறிமுகம் ஆகிறார், முரளிசாமி. குணா ஒளிப்பதிவு செய்ய, ஜோஹன் இசையமைக்கிறார்.
சத்யாலயா பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் டாக்டர் சக்தி சத்யா பாஸ்கர் தயாரிக்கிறார். படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி, தொடர்ந்து சென்னை, மதுரை ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது.

Comments

Most Recent