'S Pictures' Rettaisuzhi rolling faster than Anandhapurathu Veedu

anadha
 
ஷங்க‌ரின் எஸ் பிக்சர்ஸ் அடுத்தடுத்து மூன்று படங்களை தயாரித்தது. ஈரம், ரெட்டச்சுழி, ஆனந்தபுரத்து வீடு.

இதில் ஈரம் வெளியாகி தரமான த்ரில்லர் என்று நல்ல பெயரையும், லாபத்தையும் சம்பாதித்தது. ரெட்டச்சுழி எப்போதோ வெளியாகியிருக்க வேண்டியது. படப்பிடிப்பில் ஏற்பட்ட குளறுபடிகளால் படம் இன்னும் வெளிவரவில்லை. இந்நிலையில் துபாய் திரைப்பட விழாவில் ரெட்டச்சுழி திரையிட தேர்வாகியுள்ளது.

எஸ் பிக்சர்ஸ் இறுதியாக தொடங்கிய படம் ஆனந்தபுரத்து வீடு. மர்மதேசம் தொடரை இயக்கிய நாகாதான் இதன் இயக்குனர். கணவன், மனைவியாக நந்தாவும், சாயா சிங்கும் நடித்துள்ளனர். ஹாரர் வகையைச் சேர்ந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்டது. படம் ஷங்கருக்கு முழு திருப்தி அளித்துள்ளதாகவும் தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன.

ஆனந்தபுரத்து வீடு கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரலில் திரைக்கு வருகிறது. இதன் பிறகே ரெட்டச்சுழி வெளியாகும் என்கின்றன ஷங்கர் அலுவலக வட்டாரங்கள்.

Comments

Most Recent