Entertainment
›
Cine News
›
Seemon condemned Karunanidhi statement - ஜெயராமுக்கு மன்னிப்பு - சீமான் சீற்றம்
தமிழ்ப் பெண்களை இழிவாகப் பேசிய ஜெயராம் மன்னிப்பு கேட்டதால் அவரை மன்னிப்போம் மறப்போம் என்று கூறியிருந்தார் கருணாநிதி. இதற்கு கடும் கண்டனம் தெ...
தமிழ்ப் பெண்களை இழிவாகப் பேசிய ஜெயராம் மன்னிப்பு கேட்டதால் அவரை மன்னிப்போம் மறப்போம் என்று கூறியிருந்தார் கருணாநிதி. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் இயக்குனர் சீமான்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வீரத்திலும் அறிவிலும் உலகத்துக்கே முன் மாதிரியாக திகழும் தமிழப் பெண்களை ஜெயராம் இழிவுப்படுத்தி பேசியிருக்கிறார். இது ஒட்டுமொத்த தமிழினத்தை இழிவுப்படுத்தும் செயலாகும்.
இது தொடர்பாக நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். என் மீதும் வன்முறையை தூண்டியதாக வழக்குப் போடப்பட்டுள்ளது. இது என்னை அச்சுறுத்தும் நோக்கில் போடப்பட்ட வழக்கு.
இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்திருப்பவர், உணர்வுபூர்வமான விஷயத்தில் இழிவாகப் பேசி வன்முறையை தூண்டிவிட்டவர் ஜெயராம்தான் நானல்ல. நாம் தமிழர் ஜெயராமுக்கு எதிராகப் போராடியிருக்காவிடில் அவரது கருத்து வரலாற்றில் பதிவாகியிருக்கும். தமிழ்ப் பெண்களை இழிவுப்படுத்தியவருக்கு மன்னிப்பு, எதிர்த்துப் போராடிய எங்களுக்கு சிறையா என்று கேள்வி எழுப்பியுள்ளார் சீமான்.

Comments
Post a Comment