இந்தியாவின் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களுள் ஒன்றான அகமதாபாத் ஐஐஎம்மில் நடிகை ஸ்ரேயா விரிவுரை நிகழ்த்தி மாணவர்களை அசர வைத்தார். மீடியா மற்ற...
இந்தியாவின் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களுள் ஒன்றான அகமதாபாத் ஐஐஎம்மில் நடிகை ஸ்ரேயா விரிவுரை நிகழ்த்தி மாணவர்களை அசர வைத்தார்.
மீடியா மற்றும் சினிமாவின் முக்கியத்துவம் கருதி, இந்த ஆண்டு முதல் அகமதாபாத் ஐஐஎம்மில் சினிமா பிஸினஸ் பற்றி தனி கோர்ஸே அறிமுகப்படுத்தியுள்ளனர். இதற்கான வகுப்பில்தான் ஸ்ரேயா தோன்றி மாணவர்களுக்கு க்ளாஸ் எடுத்தார்.
ஐஐஎம்மில் லெக்சர் அடித்த ஒரே நடிகை இந்தியாவிலேயே ஸ்ரேயாதான் என்கிறார்கள். இதுவரை ஷாரூக்கான், அமீர்கான் ஆகிய இரு நடிகர்கள் மட்டுமே ஐஐஎம் மாணவர் மத்தியில் உரையாற்றிய பெருமையைப் பெற்றுள்ளனர். ஒரு படத்தை எப்படி மார்க்கெட்டிங் மற்றும் பிராண்டிங் செய்ய வேண்டும் என்பது குறித்து அவர் விரிவுரை நிகழ்த்தினார்.
ஸ்ரேயா பாடம் நடத்துகிறார் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால் மாணவர்கள் 10 சதவிகிதம் வந்திருந்தனர். அமைதியாக அமர்ந்து அவர் பாடம் நடத்துவதைக் கேட்டனர்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா உலகில் எப்படி படங்களை மார்கெட் செய்கிறார்கள், அவர்களது வெற்றியின் ரகசியம் குறித்தெல்லாம் விலாவாரியாக சொன்னாராம் ஸ்ரேயா.
நடிகைக்குள் ஒரு பிசினஸ் பெண்மணி, கிரேட்!
Comments
Post a Comment