தமிழில் கார்த்திகா என்ற பெயரில், சில ஹீரோயின்கள் குழப்பம் ஏற்படுத்துகின்றனர். இப்போது கன்னடத்திலும் பெயர் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ...
தமிழில் கார்த்திகா என்ற பெயரில், சில ஹீரோயின்கள் குழப்பம் ஏற்படுத்துகின்றனர். இப்போது கன்னடத்திலும் பெயர் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அங்கு ‘கல்கி’ ஸ்ருதி இருக்கிறார். ‘காவலர் குடியிருப்பு’ ஹீரோயின் பெயரும் ஸ்ருதி. கன்னடத்தில் ‘போலீஸ் குவார்ட்டர்ஸ்’ படத்தில் அவர் நடிக்கிறார். ‘ஆடு அட்டாடு’ கன்னட படத்தில் நடிக்கும் ஹேமமாலினி, ஸ்ருதி என்ற பெயரிலேயே நடிக்கிறார். புனித் ராஜ்குமார் ஜோடியாக இன்னொரு கன்னட படத்தில் நடிக்கிறார் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி. இதனால் அங்கும் அனைவருக்கும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாம்.
Comments
Post a Comment