Simbu-Trisha Lip Lock in VTV : சிம்பு-த்ரிஷா 'லிப் டு லிப்'!

http://thatstamil.oneindia.in/img/2010/02/11-trisha-simbu-200.jpg
வுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு-த்ரிஷா நடித்துள்ள விண்ணத் தாண்டி வருவாயா ரிலீசுக்குத் தயாராகிவிட்டது.

இந்தப் படம் நேற்று சென்னையில் சென்சார் செய்யப்பட்டது. தணிக்கைக் குழுவினர் இப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.

படம் சிறப்பாக உள்ளதாக பாராட்டு தெரிவித்த தணிக்கைக் குழுவினர், இந்தப் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் அளிக்கக் காரணம் படத்தி இடம்பெற்றுள்ள சிம்பு- த்ரிஷா முத்தக்காட்சிதான் என்று விளக்கம் அளித்துள்ளனர்.

காதலர்களின் ரொமான்ஸை வெளிப்படுத்தும் மிக அழுத்தமான உதட்டோடு உதடு பதிக்கும் முத்தக் காட்சிகள் இந்தப்படத்தில் உள்ளதாகவும், ஆனால் அந்தக் காட்சி வெகு சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

ஜெஸ்ஸி என்ற மலையாளப் பெண்ணாக நடித்துள்ளாராம் த்ரிஷா.

ஆஸ்கர், கிராமி அவார்டுகள் பெற்ற பிறகு ரஹ்மான் இசையில் வெளிவரும் முதல் தமிழ்ப் படம் இது.

உதயநிதியின் ரெட்ஜெயன்ட் மூவீஸ் இந்தப் படத்தின் வினியோக உரிமையை வாங்கியுள்ளது.

Comments

Most Recent