சன் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் தொடர் "தங்கம்'. இந்தத் தொடரை "விஷன் டைம்' நிறுவனம் சார்பில் தயாரித்து, கதாநாயகியாகவும்...
சன் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் தொடர் "தங்கம்'. இந்தத் தொடரை "விஷன் டைம்' நிறுவனம் சார்பில் தயாரித்து, கதாநாயகியாகவும் நடித்து வருகிறார் ரம்யாகிருஷ்ணன்.
இந்த நிறுவனத்துடன் இணைந்து "சிந்தால்' சோப்பு நிறுவனம் நேயர்களுக்கு ஒரு போட்டியை அறிவித்துள்ளது.
"சருமப் பாதுகாப்பு சவால்' என்ற இந்தப் போட்டியில் 20 முதல் 25 வயது வரையிலான பெண்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.
பங்கேற்க விரும்பும் பெண்கள் தங்கள் மொபைல் போனிலிருந்து ஆங்கிலத்தில் சிந்தால் என டைப் செய்து, இடைவெளி (space) விட்டு தங்கள் பெயர், வயது, முகவரி ஆகியவற்றை குறிப்பிட்டு 56767 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். செய்தால் போதுமானது.
எஸ்.எம்.எஸ். செய்தவர்களுக்கு மதுரை, திருச்சி, கோவை ஆகிய இடங்களில் முதல் கட்டத் தேர்வு நடைபெறும். அதில் தேர்வு பெறுபவர்களுக்கு சென்னையில் இறுதிக் கட்டத் தேர்வு நடைபெறும். இதில் வெற்றி பெறும் நேயருக்கு "தங்கம்' தொடரின் இறுதி வரை ரம்யாகிருஷ்ணனுடன் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கப்படும்.
Comments
Post a Comment