இன்றைய டிவி நிகழ்சிகளில் , Television Bits and Ajith Vs Kalaingar


கலைஞருக்கு சென்ற வாரம் இடம்பெற்ற பாராட்டு விழாவில் அஜித் பேசிய பேச்சு ஒரு பிரிவினரால் வரவேற்க்கப்பட்ட போதும் இன்னொரு பிரிவினரை எரிச்சலுக்கு உள்ளாகி இருப்பது உண்மை. இவர்களில் முக்கியமானவர்கள் 'நடிகர்சங்க ரவுடிகள்' மற்றும் 'கலைஞர்' தரப்பினர் . நடிகர் சங்கத்தினருக்கு தங்களை நாறடித்தது கோபமாக இருப்பதுபோல கலைஞருக்கு எடுத்த விழா இப்படி புஸ்வானமாக போனதற்கு அஜித்தின் பேச்சு முக்கிய காரணம் என கலைஞர்' தரப்பினரும் கடுப்பில் இருப்பார்கள் என எதிர்பார்க்க பட்டது. அப்பவே அஜித்தின் பேச்சு எடிட் செய்யப் படலாம் என்ற பேச்சுக்கள் உலாவின. இது கிட்டத்தட்ட சரி போலவே இருக்கிறது, இன்று கலைஞர் தொலைக்காட்சியில் முதல்முறையாக இந்த விழாவினை ஒளிபரப்புவதற்கு விளம்பரங்கள் ஒளிபரப்ப தொடங்கினர்.

வழமையான பில்டப்புடன் திரையுலக சூரியனுக்கு நன்றி சொல்லும் விழா என கூறப்படும் இந்த விழாவிற்கு அமிதாப்பச்சன் தலைமையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சூர்யா,விக்ரம் என்போர் பங்குபற்றியதாக விளம்பரப்படுத்தப்படுகிறது. இந்த விழாவில் முக்கிய பிரச்சினையை கிளப்பி பாராட்டையும் விமர்சனத்தையும் பெற்று விழாவின் போக்கையே மாற்றிய அஜித்தின் பெயர் இந்த லிஸ்டில் இல்லாதது அஜித்தின் பேச்சு எடிட் செய்யப்பட்டுவிடும் என்ற சந்தேகத்தை உறுதி செய்வதுபோல் உள்ளது. இப்போது ரஜினியின் பேச்சாவதுமுழுமையாக ஒளிபரப்பபடுமா என்பதும் சந்தேகமாக உள்ளது.

அடுத்து சண் டிவியின் இன்ப அதிர்ச்சியாக இன்று 'அசல்' டாப் 10 படங்கள் வரிசையில் முதலிடத்தில் இருந்ததை குறிப்பிட்டே ஆகவேண்டும். அஜித் படங்கள் முதலிடத்தை பிடிப்பது சன்னில் அபூர்வம். அடுத்த வாரம் தயாநிதிமாறனின் வெளியீட்டில் வெளிவந்த 'தீராத விளையாட்டுபிள்ளை' தரவரிசையில் சேர்த்துக்கொள்ளப்படும்வரை ஒருவாரமாவது அசல் முதலிடத்தில் இருக்கும். அதேபோல அசலுக்கு திரைவிமர்சனமும் சற்று அதிகமாகவே நன்றாக சொல்லப்பட்டது, இவற்றையெல்லாம் பார்க்கும்போது அஜித்மீது சன்னுக்கு திடீர்பாசம் வந்துவிட்டதாக எண்ணலாம்,உண்மை என்னவெனின் அசலின் ஒளிபரப்பு உரிமையை சண் வாங்கியதே இந்த மாற்றத்திற்கு காரணம்.ஏதாவது ஒருவகையில் சண் அஜித் படத்திற்கு உதவுவது இதுதான் முதல்தடவை, இருந்தாலும் 'அசலின்' வெற்றி நாளைமறுதின 'பாக்ஸ் ஆபீஸ்' நிலவரத்தை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.



பணத்தின் மீது படுத்திருக்கும் சண் நெர்வோர்க் கடந்த சில மாதங்களாக நடாத்திவரும் டீலா, நோ டீலா நிகழ்ச்சியை கட்டாயமாக பார்க்கவேண்டிய சூழ்நிலை, அதில் நிகழ்ச்சியை வழங்கும் அந்த அரைவேக்காட்டுத் தம்பியின் கொடுமையை தாங்க முடியவில்லை. எதோ மூளையை அல்லது உடற்பலத்தை பயன்படுத்தி விளையாடும் விளையாட்டைப்போல "சூப்பரா விளையாடுறீங்க" , "நல்லா பாத்து விளையாடுங்கோ" , "சின்ன எமவ்ண்டா எடுங்க" என்று அந்தாளு பண்ணுற மோட்டுத்தனமான கூத்தை தாங்கமுடியல. சண் டிவியால ஒரு நல்ல நிகழ்ச்சியை கூட தரமுடியாதா? எந்த நிகழ்ச்சி செய்தாலும் பணத்திற்கு கொடுக்கும் முன்னுரிமையை நிகழ்ச்சியின் தரத்திற்கு சண் கொடுப்பதில்லை.



அடுத்து கலைஞர் டிவியின் புதிய 'மானாட மயிலாட ' தொடர் நடனம் (நாடகம்) ஆரம்பிக்க உள்ளது, அடுத்த ஆறு மாதத்திற்கு புதிய நடனமாடும் போட்டியாளர்கள் தமது திறமையை வெளிப்படுத்துகிறார்களோ இல்லையோ கலாவும் குஷ்புவும் தங்களது நடிப்பு திறனை வளர்த்துக்கொள்ள போகிறார்கள். இதே நேரம் விஜயில் ஜோடி நோ (? ) ஆரம்பமாகவுள்ளது. ஏற்கனவே பிரபலமான போட்டியாளர்கள்தான் அதிகளவு பங்கு பற்றுகிறார்கள்,சண் டிவியில ஆடவரெல்லாம் ஆடவரலாம் என்றொரு நடன போட்டியென சனி, ஞாயிறென்ராலே ஒரே கூத்துத்தான். தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு காக்கா வலிப்பு வராவிட்டால் சரி, ஆகமொத்தத்தில் கூத்து ஆரம்பிச்சிடுத்துடோய்.....

Comments

Most Recent