Vadivelu issues legal notice to Singamuthu

அவதூறு ஏற்படுத்தும் பேட்டி- சிங்கமுத்துவுக்கு வடிவேலு வக்கீல் நோட்டீஸ்
 http://thatstamil.oneindia.in/img/2010/02/09-vadivelu-sona200.jpg
களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேட்டி அளித்துள்ளதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால், ரூ. 25 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்று கோரி நடிகர் சிங்கமுத்துவுக்கு நடிகர் வடிவேலு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக வடிவேலு சார்பில் அவரது வழக்கறிஞர் பால். கனகராஜ் அனுப்பியுள்ள நோட்டீஸில் கூறப்பட்டுள்ளதாவது:

நான் 2 படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறேன். நூற்றுக்கணக்கான படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளேன். எனக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

நில மோசடி தொடர்பாக உங்கள் மீது புகார் கொடுத்துள்ளேன். இந்நிலையில் வார இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், என்னை பற்றி அவதூறான கருத்துக்களை கூறியுள்ளீர்கள்.

என்னை நரகாசுரன் என்று கூறி உள்ளீர்கள். மேலும் சிவாஜி கணேசன் மரணம் அடைந்தபோது நான் அழுதது நடிப்பு என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளீர்கள்.

மேலும், எனது வீட்டு வேலைக்காரி மற்றும் மேனேஜர் மரணத்துக்கும் நானே காரணம் என்று கூறியிருக்கறீர்கள். இந்த குற்றச் சாட்டுக்கள் அவதூறானவை. எனது புகழுக்கு களங்கம் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளன.

எனவே, 7 நாட்களுக்குள் நீங்கள் மன்னிப்பு தெரிவிக்க வேண்டும். வக்கீல் நோட்டீஸ் அனுப்புவதற்கான செலவை ஏற்க வேண்டும். இல்லையென்றால் ரூ.25 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடருவேன் என்று கூறியுள்ளார் வடிவேலு.

மேலும், சிங்கமுத்துவின் பேட்டியை வெளியிட்ட வார இதழுக்கும் அவர் வக்கீல் நோட்டீஸை அனுப்பியுள்ளார்.

Comments

Most Recent