We are telecasting Ajith's speech - Kalaingar TV

http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES1/ajith_pressmeet01.jpg

கலையுலகம் நடத்திய பாராட்டு விழாவில் அஜீத்தின் பேச்சு ஏகப்பட்ட பிரச்சனைகளுக்கு பிள்ளையார் சுழி போட்டு விட்டது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பும் உரிமையை பெற்றிருந்த கலைஞர் டி.வியில் அஜீத்தின் க்ளிப்பிங்ஸ் மிஸ்சிங்.

இதுவேறு தனி விமர்சனத்தை எழுப்ப, புது புது கோணங்களில் பயணிக்க ஆரம்பித்தது யூகங்களும், பிரச்சனைகளும். ஆனால் இதெல்லாம் போன வார நிலவரம். இந்த வாரம் எல்லாமே தலைகீழ். அஜீத் பற்றிய விவாதங்கள் மெல்ல அமுங்கிவிட்டன. அவரை கைது செய்ய வலியுறுத்தி ஜாகுவார் தங்கம் நடத்தவிருந்த உண்ணாவிரதத்திற்கும் உடனடியாக அனுமதி கிடைக்கவில்லை. அடுத்த வாரம் பார்க்கலாம் என்று கூறிவிட்டார்களாம். அதற்குள் ஏதாவது ஒரு மாயக்கரம் வந்து ஜாகுவாரையும் அமைதிபடுத்திவிடலாம்.

இன்னொரு முக்கியமான சங்கதி. கலையுலக விழாவில் அஜீத்தின் பேச்சு கலைஞர் டி.வியில் இடம் பெறுமா என்று ஒட்டுமொத்த ரசிகர்களும் எதிர்பார்த்திருக்கிறார்கள் அல்லவா? இடம்பெறும் என்பதே தற்போது கசியும் தகவல்கள். திறந்த மனதுடன் அஜீத்தின் பேச்சை ஒளிபரப்ப முன்வந்திருக்கிறார்களாம் நிர்வாகிகள்.

அவர் சட்டை பையிலிருந்து ஒரு பேப்பரை எடுத்து வைத்துக் கொண்டு அதை பார்த்து பார்த்து படித்தாரல்லவா? (பேசினாரல்லவா?) அந்த பகுதி மட்டும் ஒளிபரப்பாகிறதாம். முதல்வர் பற்றிய அவரது வியப்பும், அன்பும் வெளிப்படுகிற பேச்சு அது. அதன்பின்பு அவர் பேசிய விமர்சனத்திக்குரிய பகுதிகள் மட்டும் இடம் பெறாதாம்.

ஆனந்தப்படட்டும் அஜீத் ரசிகர்கள்

Comments

Most Recent