Aishwarya Rai proud to be part in Tamil cinema

http://thatstamil.oneindia.in/img/2010/03/16-aishu200.jpg

தமிழ் சினிமாவில் நானும் ஒரு அங்கமாக இருக்கிறேன் என்பதே பெருமையாக உள்ளது என்றார் முன்னாள் உலக அழகியும் ரஜினியின் எந்திரன் பட நாயகியுமான ஐஸ்வர்யா ராய்.

இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் தாமிரா இயக்கியுள்ள படம் ரெட்டச்சுழி. இயக்குநர்கள் பாலச்சந்தர் மற்றும் பாரதிராஜா நடித்துள்ள இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா திங்கள்கிழமை மாலை சத்யம் சினிமாஸில் நடந்தது.

இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஐஸ்வர்யா ராய் ஆடியோவை வெளியிட, கவிஞர் வைரமுத்து பெற்றுக் கொண்டார்.

பின்னர் ஐஸ்வர்யா ராய் சரளமான தமிழில் பேசத் துவங்கி, பின் ஆங்கிலத்தில் இப்படிக் கூறினார்:

"என்னைப் பற்றி இங்கே எல்லோரும் பெருமையாகப் பேசினார்கள். நான் இங்கே வந்திருப்பதில் எந்தப் பெருமையும் இல்லை. இயக்குநர்கள் பாலச்சந்தர் - பாரதிராஜா போன்ற சாதனையாளர்கள் மத்தியில் நானும் இருப்பதுதான் பெருமை. ஒரு பெண்ணுக்கு இங்கே தரப்படும் மரியாதை என்னைப் பெருமிதப்பட வைக்கிறது.

தமிழ் சினிமாவையும் ஷங்கரையும் எனது வாழ்நாளில் மறக்க முடியாது. நான் முதலில் நடித்தது தமிழில்தான். எனது முதல் வெற்றிப்படம் ஜீன்ஸை இயக்கியவர் ஷங்கர். அந்தப் படம்தான் சினிமாவில் நான் தொடர்ந்து நடிக்கலாம் என்ற நம்பிக்கையை அளித்தது. அந்த ஒரே படத்தில் நான் கற்றுக் கொண்ட விஷயங்கள் ஏராளம்.

எந்திரன் படத்தில் நான் நடிப்பது எனக்கு நிஜமாகவே பெருமையாக உள்ளது. எத்தனை அற்புதமான குழு அது!

இங்கே, ரெட்டச் சுழி படத்தின் பாடல்கள் மற்றும் சில காட்சிகளைப் பார்த்தேன். கார்த்திக் ராஜா இசை சிறப்பாக இருந்தது. படம் பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் படத்தை நா்ன் கண்டிப்பாகப் பார்ப்பேன். ஷங்கர் சார் அதற்கான வாய்ப்பை எனக்கு ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்..." என்றார்

Comments

Most Recent