முதல்வரின் பேரனும் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகனும், திரைப்படத் தயாரிப்பாளருமான தயாநிதி அழகிரிக்கும்- அனுஷாவுக்கும் வெள்ளிக்கிழமை ...
முதல்வரின் பேரனும் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகனும், திரைப்படத் தயாரிப்பாளருமான தயாநிதி அழகிரிக்கும்- அனுஷாவுக்கும் வெள்ளிக்கிழமை மாலை நிச்சயதார்த்தம் நடந்தது.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சீத்தாராமன் மகள் அனுஷா. சென்னையில் சட்டப் படிப்பு இறுதியாண்டு படித்து வருகிறார்.
முதல்வர் கருணாநிதி- தயாளு அம்மாள் முன்னிலையில் நடந்த இந்த நிச்சயதார்த்தத்தில், நடிகர் அஜீத் மற்றும் அவரது மனைவி ஷாலினி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அஜீத்தின் அடுத்த படத்தைத் தயாரிப்பவர் தயாநிதிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிச்சயதார்த்தத்தில் மு.க ஸ்டாலின், கலாநிதி மாறன் உள்ளிட்ட முதல்வரின் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் பங்கேற்றனர். மு.க.தமிழரசு குடும்பத்தினர், ராஜாத்தி அம்மாள், கவிஞர் கனிமொழி எம்.பி., உள்ளிட்ட முதல்வரின் உறவினர்கள் கலந்து கொண்டனர்.
திருமணத் தேதி பின்னர் அறிவிக்கப்படுகிறது.
Comments
Post a Comment