ஈ.எஸ்.கே பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் டி.டி.ராஜா தயாரிக்கும் படம், ‘வல்லக்கோட்டை’. இதில் அர்ஜுன், ஹரிப்பிரியா ஜோடி. மற்றும் ஆஷிஷ் வித்...
ஈ.எஸ்.கே பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் டி.டி.ராஜா தயாரிக்கும் படம், ‘வல்லக்கோட்டை’. இதில் அர்ஜுன், ஹரிப்பிரியா ஜோடி. மற்றும் ஆஷிஷ் வித்யார்த்தி, வின்சென்ட் அசோகன், சுரேஷ், கஞ்சா கருப்பு நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, ஆஞ்சநேயலு. இசை, தினா. படத்தை இயக்கும் ஏ.வெங்கடேஷ், இப்படம் பற்றி கூறியதாவது:
‘வாத்தியார்’, ‘துரை’ படங்களை தொடர்ந்து அர்ஜுனை இயக்குகிறேன். அர்ஜுன் தன் தோற்றத்தை மாற்றியுள்ளார். படத்தில் அவர் சூப்பர்மேனாக வருவதால், புதுவிதமான மேக்கப் சாதனங்களை வெளிநாட்டில் இருந்து வரவழைத்துள்ளார். சண்டைக் காட்சிக்காக ஹாலிவுட் கேமரா வரவழைக்கப்பட்டுள்ளது. சீனாவில் நடைபெறும் கண்காட்சி ஒன்றில் அர்ஜுன் நடிக்கும் முக்கிய காட்சிகளும், ஹாங்காங்கில் பாடல் காட்சிகளும் படமாகின்றன. பொதுவாக, கோபப்படாதீர்கள் என்றுதான் கருத்து சொல்வார்கள். ஆனால் இப்படத்தில், ‘தயவுசெய்து கோபப்படுங்கள்’ என்று சொல்கிறோம். அது ஏன், எதற்கு என்பது கிளைமாக்ஸ். இவ்வாறு வெங்கடேஷ் கூறினார்.
Comments
Post a Comment